ஐ.ஏ.எஸ் அதிகாரி, எழுத்தாளர், படைப்பாளர், தன்னம்பிக்கை பேச்சாளர் என்று, பன்முகத்தன்மை கொண்ட தமிழ் ஆளுமையாக வலம் வரும் இறையன்பு ஐ.ஏ.எஸ் தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது தமிழக அரசுக்கும், தமிழக மக்களும் கூடுதல் பலமாகவே அமைந்திருக்கிறது.

தமிழ்நாட்டின் புதிய தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் வெ. இறையன்பு ஐஏஎஸ் அவர்கள்.

தமிழ்நாட்டில் தமிழ் தெரிந்த, அதுவும் தமிழ் மண்ணின் பண்பாட்டுக் கலாச்சாரங்களை நன்கு உணர்ந்த ஒரு தனிப்பெரும் ஆளுமையாக வலம் வரக்கூடிய ஒருவர், தமிழ்நாட்டின் புதிய தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டு இருப்பது உண்மையிலேயே வரவேற்புக்குரிய ஒரு விசயம் தான். அதுவும், தமிழக மக்களுக்கு, அது இன்னும் பல நன்மைகளையே உண்டாக்கி அழகு பார்க்கும்.

- சேலம் மாவட்டம் காட்டூரில் கடந்த 1963 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி, வெங்கடாசலம் - பேபி சரோஜா தம்பதியருக்கு, மகனாகப் பிறந்தார் இறையன்பு ஐஏஎஸ்.

- வேளாண்மைப் பட்டப்படிப்பு படித்து முடித்திருக்கும் இறையன்பு, தமிழ் வழியே ஐ.ஏ,எஸ் தேர்வை எழுதி வெற்றி பெற்றவர். 

- உளவியலில் முதுகலைப் பட்டம், வர்த்தக நிர்வாகத்தில் முனைவர் பட்டம், ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம், மேலாண்மையில் முதுமுனைவர் பட்டங்களைப் பெற்று தனது அறிவை இன்னும் இன்னும் வளர்த்துக்கொண்டவர். 

- நாகப்பட்டினம் மாவட்டத்தில் உதவி ஆட்சியராக பணியைத் தொடங்கியவர்.

- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இவர் இருந்தபோது, “ஆட்சியரின் பணி என்பது, மக்களுக்கு முழுவதுமாக பணி செய்வதே” என்பதை நிரூபித்து காட்டியவர். 

- கடலூர் மாவட்டத்தில் இவர் சுனாமி பேரிடரால் பாதிக்கப்பட்ட கிராமம் ஒன்றில் அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நிவாரணப்பணியில் ஈடுபட்டார். அப்போது, அந்தப் பகுதியை மக்கள் இறையன்பு நகர் என்றே பெயர் பலகையை வைத்து இவரது வேசைக்குப் புகழ் மாலை சூட்டினார்.

- இந்திய ஆட்சிப் பணியில் உள்ள அதிகாரிகளில் வெ.இறையன்பு முற்றிலும் வித்தியாசமானவர். 

- சமூக அக்கறை மிகுந்த மிக எளிமையான மனிதர். 

- எளிய மனிதர்களுடன் நெருங்கிப் பழகும் பண்பாளர். 

- தன்னுடைய பணியில் நேர்மை, பாரபட்சமற்ற தன்மை போன்றவற்றைத் தொடக்கம் முதலே அவர் தன்னகத்தே கொண்டவர். 

- நியாயமான நிர்வாகத்தை எப்போதும் நடத்தக்கூடியவர். 

- என்றும், எப்போதும் படித்துக்கொண்டே இருக்கும் அரசு அரசு அதிகாரி.

- எப்போதும், சிறந்த நிர்வாகத்தைத் தருவதை உறுதிப்படுத்திக்கொண்டே இருக்கும் சிறந்த அதிகாரி.

- உண்மையான காரணங்களுக்காகப் பெறப்படும் மனுக்களை, சம்மந்தப்பட்ட மனுதார் மனு கொடுத்துவிட்டு வீட்டுக்குச் செல்வதற்குள், அவர்களுடைய குறைகளைத் தீர்த்து வைத்து தீர்வு காணும் உண்மையான அதிகாரி.

- தமிழ் இலக்கியக் கூட்டங்களிலும், எழுத்தாளர் வாசகர் வட்டங்களிலும் நீண்ட உரை நிகழ்த்தி பார்வையாளர்களை தன் அறிவு வீச்சால் எப்போதும் திகைக்க வைப்பவர்.

- “ஐ.ஏ.எஸ் ஆவது எப்படி?” என்ற புத்தகத்தை எழுதி, தமிழக மாணவர்களை, இளைஞர்களை இந்திய ஆட்சிப்பணி, இதர அரசுப்பணிகளில் அதிகமாகப் பங்கெடுக்க வழிகாட்டிய வழிகாட்டி. 

- இதுவரை 100 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிக் குவித்திருக்கிறார். இவர் எழுதாத தலைப்பும், இவர் எடுக்காத தலைப்பும் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்குத் தமிழில் எந்த ஐஏஎஸ் அதிகாரியும் எழுதி குவிக்காத அளவுக்கு 100 க்கணக்கான புத்தகங்களை எழுதி, தமிழுக்கு பெரும் சேவை ஆற்றி வருகிறார்.

- இவருடைய அறிவைக்கண்ட வியந்துபோன அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 1995 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் நடைபெற்ற 8 வது உலகத் தமிழ் நாட்டை நடத்த சிறப்பு அலுவலராக நியமித்தார். 

- அதே போல் கடந்த 2010 ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான அரசு நடத்திய “உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிலும்” சிறப்பு அலுவலர் பொறுப்பை ஏற்று, செம்மொழி மாநாட்டைச் சிறப்பாக நடத்தி வெற்றி பெற வைத்தார். 

- செம்மொழி மாநாட்டில் “திருவள்ளுவரும், ஷேக்ஸ்பியரும்” என்ற தலைமையில் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து, அன்றைய முதலமைச்சர் கருணாநிதியின் பாராட்டையும், பரிசையும் பெற்று இன்னும் புகழ் பெற்றார். 

- சுற்றுச்சூழல், வனத்துறை செயலாளராக இவர் இருந்தபோது, பல புதுமைகளைப் புகுத்தி அதிலும் வெற்றி கண்டிருக்கிறார். 

- தமிழக அரசின், சுற்றுலாத்துறை செயலாளராக இவர் இருந்தபோது, “சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை சுற்றுலா தலங்களில் பல வகைகளில் புதுமைகளைப் புகுத்தி தமிழ்நாடு சுற்றுலாவைத் தொலைநோக்கில் பன் மடங்கு மேம்படுத்தி” காட்டியவர்.

- அரசின் கூடுதல் தலைமைச் செயலர் நிலையில், அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் பயிற்சித் துறைத் தலைவராக இவர் இருந்தபோது, அலுவலக உதவியாளர், எழுத்தர், அலுவலர், என பல பிரிவு அரசு பிரிவினருக்கும் சுழற்சி அடிப்படையில் கணினி பயிற்சியை வழங்கி பயிற்றுவித்தார்.

- கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக ஆட்சியில், பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். 

- கடந்த 2009 ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம், உட்பட முக்கிய பொறுப்புகளில் துணை முதலமைச்சரின் செயலாளராகவும் பணியாற்றி இருக்கிறார். 

- இவருடைய மூத்த சகோதரர் திருப்புகழ், குஜராத் பணிப் பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவர். வெ. திருப்புகழ், தற்போது ஓய்வு பெற்று விட்டாலும், பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்று இன்னும் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.