“அடி தூள்..” வேளாண் பட்ஜெட் 2022-23: ரூ.33,007.68 கோடி நிதி வேளாண்மை துறைக்கு மொத்தமாக ஒதுக்கீடு!

தமிழக சட்டப் பேரவையில் வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையை அத்துறைக்கான அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்து உள்ளார்.

அதாவது, திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே, “விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில், விவசாயத்திற்கு என்று தனியாக பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும்” என்று, திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. 

அதன்படியே, தேர்தலில் வென்ற திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஆண்டு மாநிலத்தின் முதல் இடைக்கால வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. 

அதன் தொடர்ச்சியாக, இந்தாண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதன் படி, தமிழக அரசியல் வரலாற்றில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு, இந்த ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், சற்று முன்னதாக சட்டமனத்திறல் தாக்கல் செய்தார். 

அதன்படி, இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்குப் பிறகு வேளாண்மைக்கு என்று, தனியாக ஒரு பட்ஜெட் தாக்கல் செய்யும் 3 வது மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 

அந்த வகையில், “கடந்த ஆண்டின் 86 வகையான அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது” என்றும், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

இது தொடர்பாக அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “விவசாயிகள் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு அறிமுகப்படுத்தப்பட்டது தான் வேளாண் பட்ஜெட்” என்று, சபையில் விளக்கம் அளித்தார். 

அத்துடன், “உழவர் தொழிலே உலகில் உயர்ந்தது என உணர்த்தும் வகையில் பட்ஜெட்டை முன் வைப்பதில் பெருமைகொள்கிறேன்” என்றும், வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெருமிதத்தோடு கூறினார்.

அதன் தொடர்ச்சியாக, 2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து, அது தொடர்பான அறிவிப்புகளை ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறார்.

அதன் படி,

- நெல் சாகுபடி 2021-22 ஆம் ஆண்டில் 53.50 லட்சம் ஏக்கராக  உயர்ந்து உள்ளது. 

- மாவட்ட வாரியாக விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உயர்மட்ட குழு மூலம் தீர்க்கப்பட்டு வருகிறது.

- மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு 71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

-  60,000 தமிழக விவசாயிகளுக்கு தார்பாய் வழங்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- 3,204 கிராம ஊராட்சிகளில் 300 கோடி ரூபாய் மாநில அரசின் நிதியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.

- இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ள விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக நம்மாழ்வார் இயற்கை ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

- 2020-2021 ஆம் ஆண்டுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 9.26 லட்சம் விவசாயிகளுக்கு 2,055 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டு உள்ளது.

இப்படியாக, தமிழக விவசாயிகளுக்காக பல்வேறு வேளாண் சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சட்டசபையில் அறிவித்து வருகிறார்.