தனியார் ஏற்றுமதி நிறுவனம் பண மோசடி செய்ததாக கானாத்தூர் காவல் நிலையத்தில் நடிகை சினேகா புகார் அளித்துள்ளார்.

ssதமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சினேகா,  கமல்ஹாசன், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். நடிகர் பிரசன்னா, அவரின் மனைவி நடிகை சினேகா ஆகியோர் குடும்பத்துடன் கானத்தூர், அருகே பனையூர் பகுதியிலுள்ள ஐந்தாவது அவென்யூவில் வசித்துவருகின்றனர். நடிகர் பிரசன்னாவின் நண்பர் பிரசாந்த். இவர் ஆந்திராவிலுள்ள பிரபலமான சிமென்ட் கம்பெனியில் முதலீடு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பண மோசடி செய்ததாக நடிகை சினேகா தனியார் ஏற்றுமதி நிறுவனம் மீது சென்னை கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கவுரி மினரல் சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனத்தில் முதலீடு செய்யும் போது மாதந்தோறும் ரூ. 25 லட்சம் முதலீடு செய்தால் மாதம்தோறும் ரூ 1.80 லட்சம் கிடைக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. இதை நம்பிய நடிகை சினேகா பணத்தை முதலீடு செய்துள்ளார்.

இது தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தப்படி மாதம்தோறும் பணத்தை அந்த நிறுவனம் தரவில்லை. இதனால் அந்த நிறுவனம் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி நடிகை சினேகா கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு தொழிலதிபர் மீது நடிகை சினேகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.