பாலியல் தொழிலாளி உடன் குடும்பம் நடத்திய கணவன், 2 குழந்தைகளை கொன்று விட்டு, மனைவியை கொல்ல முயன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காளிராஜ், கடந்த 2013 ஆம் ஆண்டு தங்க புஷ்பம் என்ற இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு, இந்த தம்பதிக்கு மாரீஸ்வரன், காயத்ரி ஆகிய இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.

இதனிடையே காளிராஜ், அந்த பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் கால்நடை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இதனையடுத்து, மனைவி மீது சலிப்படைந்த காளிராஜ், அந்த பகுதியில் உள்ள ஒரு பாலியல் தொழிலாளி உடன் சில காலம் உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டு, வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில், பாலியல் தொழிலாளி உடன் வாழ்க்கையில் அவருக்கு சலிப்படைந்துள்ளார். ஆனால், அப்போது, அவரது உடலில் ஏதோ மாற்றங்கள் நிகழ்வதாக, அவர் நினைத்துக்கொண்டுள்ளார். இதனால், தனக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்று பயந்து உள்ளார்.

இதன் காரணமாகப் பயந்துபோன காளிராஜ், தன்னிடமிருந்து தன் மனைவிக்கும் எதாவது நோய் பரவி விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக, மனைவி உடனான தாம்பத்தியத்தை அவர் தவிர்த்து வந்துள்ளார். தாம்பத்திய வாழ்க்கை தொடர்பாக அவரது மனைவி பல முறை கேட்டும், அவர் எந்த உண்மையும் சொல்லாமல் தவிர்த்து வந்ததாகத் தெரிகிறது.

ஒரு கட்டத்திற்கு மேல் பயத்தை கன்ரோல் பண்ண முடியாமல், தன் பயத்தை தன் மனைவியிடம் கூறி கவலைப்பட்டிருக்கிறார். அதாவது, “நான் ஒரு பெண் பாலியல் தொழிலாளி உடன் உல்லாசத்தில் பல முறை இருந்திருக்கிறேன். அதனால், எனக்கு  எச்ஐவி தொற்று ஏற்பட்டு இருக்குமோ? என்ற பயம் இருக்கிறது. 

என்னிடமிருந்து உனக்கும், அந்த எச்ஐவி தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்பதால் தான், நான் உன்னிடம் தாம்பத்தியத்திற்கு வர மறக்கிறேன்” என்ற உண்மையையும் கூறி உள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த காளிராஜ் மனைவி  தங்கபுஷ்பம், தன் கணவனை அழைத்துக்கொண்டு சிவகாசி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் குடும்பத்தோடு சென்று மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டார். 

அந்த பரிசோதனையில், அவருக்கும் அவரது மனைவிக்கும் எந்த நோய்கள் தாக்க வில்லை என்று தெரிய வந்தது. ஆனாலுமே, “எச்ஐவி என்னும் எய்ட்ஸ் நோய் தொற்று பல ஆண்டுகளுக்கு வெளியே தெரியாமல் இருக்கும் என்றும், அதன் பிறகே வெளியே தெரிய வாய்ப்பு இருப்பதாக, யாரோ சொல்லியதை நம்பி” இது குறித்து கூகுளில் தேடிப் பார்த்துள்ளார்.

அப்போது, அவருக்கு சந்தேகங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அப்போது, பால்வினை நோய் மற்றும் எச்ஐவி தொற்று அறிகுறிகள் என கூகுளில் சொல்லப்பட்டு இருந்தவை யாரும், தனக்கும் இருப்பதாக நினைத்துக் கொண்ட காளிராஜ், இதனால் மேலும் பயந்து நடுங்கி உள்ளார்.

இது தொடர்பாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், எப்போதும் இந்த நோய் குறித்தே அவர் கலவையுடன் காணப்பட்டுள்ளார்.

அத்துடன், “இந்த நோயை வைத்துக் கொண்டு உயிர் வாழ முடியாது என்று நினைத்த” அவர், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளவும் முடிவு செய்தார். இந்த தற்கொலை முடிவை தன் மனைவியிடம் அவர் கூறி உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவரது மனைவி சண்டை போட்டுள்ளார்.

இதனால், இன்னும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், கடந்த 2 மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிப் போய் கிடந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று தங்கபுஷ்பம் வேலைக்குச் சென்று விட்டு மாலை வீடு திரும்பிய நிலையில், வீட்டில் தனது 2 குழந்தைகளும் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், சடலமாகக் கிடந்துள்ளனர். அவர்களது அருகில் கணவர் புலம்பிய படியே அமர்ந்துள்ளார்.

மனைவியைப் பார்த்ததும், “ 2 குழந்தைகளையும் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டேன். நீயும் வா, நம்ம 2 பேருமே இப்போதே தற்கொலை செய்து கொள்வோம்” என்று, மனைவியுடன் கூறிக்கொண்டே மனைவியின் கழுத்தை நெரிக்க அருகில் வந்துள்ளார்.

இதனால், பதறிப்போன அவர் சத்தம் போட்டுக்கொண்டே வெளியே ஓடி வந்து கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து “என்ன வென்று?” விசாரித்துள்ளனர்.

அப்போது, தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் இருந்த காளிராஜ், அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். அதன் பிறகு, “தன் குழந்தைகள் கொல்லப்பட்டதையும், தன்னையும் கொலை செய்யக் கணவன் வருவதாகவும்” கூறி புலம்பி உள்ளார்.
 
இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய காளிராஜை தேடி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.