“வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில் அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகாவில் மிக கனமழை பெய்யக்கூடும்” என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

“வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதன் காரணமாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாகவும் இன்று
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்” என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அத்துடன், “விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய
கன மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேகமான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும்” பெய்யும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையும் கூறியிருந்தது.

மேலும், “திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல், மிதமான மழை வரை பெய்யக் கூடும்” என்றும்
வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு இருந்தது.

இந்த நிலையில் தான், “வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில், அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக”
இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

அதாவது, “அக்டோபர் 10 ஆம் தேதியே இந்த காற்றழுத்த பகுதி உருவாகும் என கூறப்பட்ட நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது சற்று தாமதமாக உருவாகி
இருக்கிறது.

குறிப்பாக, “தற்போது, வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திரா - ஒடிஷா நோக்கி செல்லும்”
என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

அதே போல், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகாவில் மிக கனமழை பெய்யக் கூடும்” என்றும், இந்திய வானிலை
ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதனால், தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை தமிழக அரசு தற்போது விரைந்து மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக, வெப்பச்சலனம் காரணமாக, நேற்று மாலை முதல் சென்னையில் தி.நகர், கே.கே.நகர், அசோக் நகர், கிண்டி, வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட
பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.