காப்பகத்தில் முறையான அனுமதியின்றி பெண் நிர்வாகி ஒருவர் தனது தம்பியைத் தங்க வைத்த நிலையில், அவர் அங்குள்ள சிறுமி மற்றும் இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை பெரவள்ளூர் ஜவஹர் நகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் காப்பகத்தில் முதியவர்கள், சிறுவர், சிறுமிகள், இளம் பெண்கள் என்று கிட்டதட்ட 130 பேர் தங்கி உள்ளனர்.

இந்த காப்பகத்தில் நிர்வாக செயலாளராக 56 வயதான இசபல் ரிச்சர்சன் என்ற பெண் இருந்து வருகிறார். இந்த பெண் நிர்வாகி, தனது தம்பி பென்னர்ட் ரிச்சர்ட்சன் என்பவரை, அந்த காப்பகத்தின் நிர்வாக கமிட்டி உறுப்பினர்களுடைய முறையான அனுமதி இன்றி, அந்த காப்பகத்தில் தங்க வைத்திருக்கிறார்.

இப்படியாக, காப்பகத்தில் தங்கி இருந்த அந்த பெண் நிர்வாகியின் சகோதரர், அந்த காப்பகத்தில் இருந்த 15 வயது சிறுமிக்கும், 20 வயது இளம் பெண்ணுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர்கள் பயத்தில் இது குறித்து வெளியே சொல்லாமல் இருந்து உள்ளனர். அவர்களின் பயத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த நபர், அவர்கள் இருவருக்கும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.

அத்துடன், “பாலியல் தொல்லையால், நாமே யாரும் இல்லாமல் காப்பகத்தில் இருக்கிறோம்” என்று, தொடக்கத்தில் பொறுத்துப்போன அவர்கள், ஒரு கட்டத்திற்கு மேல் இனியும் பொறுக்க முடியாது என்று பொங்கி எழுந்து காப்பகத்தின் கமிட்டி உறுப்பினர்களிடம் புகார் அளித்து உள்ளனர்.

இது குறித்து கடும் அதிர்ச்சியடைந்த கமிட்டி உறுப்பினர்கள், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், உண்மை இருப்பது தெரிய வந்ததை அடுத்து, காப்பக விதிகளை மீறி தனது சகோதரரை காப்பகத்தில் தங்க வைத்த பெண் நிர்வாகி இசபல் ரிச்சர்சன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

அத்துடன், பாலியல் தொல்லை கொடுத்து வந்த பென்னர்ச் என்பவரையும், அவரை காப்பகத்தில் தங்க அனுமதித்து அவருக்கு உடந்தையாக இருந்த இசபெல் ரிச்சர்ட்சன் ஆகிய இருவர் மீதும் பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இசபெல் ரிச்சர்சனை கைது செய்தனர். அத்துடன், அவரது சகோதரி பென்னர்ட் திடீரென்று தலைமறைவாகி உள்ளார். அவரை கைது செய்ய போலீசார் தொடர்ந்து தீவிர வேட்டையில் ஈடுபட்ட நிலையில், அவரும் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.