மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வீடுகள் சேதமடைந்தன. இந்த பகுதிகளை அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன் சீரமைப்பு பணிகளை துரிதமாக செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் சிறப்பான ஆட்சியை தந்து வருவதக்கவும்.
அ.தி.மு.க. ஆட்சியில் மாணவர்கள் நலன் பாதுகாக்கப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றும் இதனால் இந்த கொரோனா காலத்திலும் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அதிகம் ஏற்பட்டுள்ளது எனக்கூறினார்.

கொரோனா தடுப்பு பணியில் இந்தியாவிலேயே தமிழகம் தான் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இதனால் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மு. க.ஸ்டாலின் மக்களை திசை திருப்புவதற்காக அ.தி.மு.க. அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். இதை மக்கள் நம்ப தயாராக இல்லை.வருகிற 2021 சட்டமன்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமைகின்ற கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.

தமிழகத்தைப் பொருத்தவரை திராவிட கட்சிகள் வலுவாக உள்ளன. தேசிய கட்சிகள் டெல்லிக்கு வேண்டுமானால் ராஜாவாக இருக்கலாம். ஆனால் தமிழகத்தில் அவர்களது நிலை என்ன என்பது அவர்களுக்கே தெரியும். எனவே எந்த தேர்தலிலும் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் தலைமையில் தான் கூட்டணி அமைக்க முடியும். தேசிய கட்சிகள் தலைமையில் கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை என செல்லூர் ராஜீ செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.