விழுப்புரம் அருகே தந்தைக்கு உதவி செய்யும் வகையில் பள்ளி மாணவிகள் இரண்டு பேர் பனையேறி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் நரசிங்கனூர் பகுதியை சேர்ந்த பனை தொழிலாளி பாண்டியன். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் உள்ள பனை மரத்தில் பதநீர் இறக்கி குடும்பத்தை வழி நடத்தி வருகின்றார்.  இவரது மகள்கள் வீணஸ் மற்றும் ஹரிஷ்மா அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். 

இந்நிலையில் தந்தையின் கஷ்டத்தை உணர்ந்த மாணவிகள் இருவரும் தந்தைக்கு உதவி செய்யும் நோக்கத்தில் பனை தொழிலை படித்து உள்ளர். அந்த வகையில் காலையில் பள்ளிக்கு செல்வதற்கு முன்பாக மாணவிகள் இருவரும் பனை மரத்தில் இருந்து பதநீரை இறக்கி வைத்துவிட்டு பள்ளிக்கு செல்கின்றனர்.

அதன் பின்னர் அம்மாணவிகள் மாலை வீடு திருப்பிய பின்பு பனை தோட்டத்துக்கு வந்து தந்தைக்கு உதவி செய்கின்றர். மிகவும் கஷ்டமான தொழில் என்று பலர் ஒதுங்கி செல்லும் நிலையில் தந்தைக்கு உதவியாக இரண்டு பள்ளி சிறுமிகள் பனையேறி வருவதும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகின்றனர்.

மேலும் இது குறித்து மாணவிகள் இருவரும் கூறுகையில்: தந்தைக்கு உதவி செய்ய நாங்கள் பனையேறி வருகிறோம். காலையில் பள்ளிக்கு செல்வதற்கு முன்பு தந்தையுடன் சேர்ந்து பதநீர் இறக்கி வைத்து விட்டு செல்வோம். பின்னர் மாலை வந்த பணியை மேற்கொள்வோம். இதுபோன்று பனை ஓலையில் இருந்து பனை பொருட்கள் செய்யவும் படித்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.