9 வயது சிறுமிக்கு அந்த பகுதியின் ரேஷன் கடை ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் 9 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது, கொரோனா வைரஸ் தொற்றால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சிறுமி தனது பெற்றோரிடம் வீட்டில் இருந்து வருகிறார். அத்துடன், வீட்டில் பெற்றோருக்கு உதவியாக சின்ன சின்ன வேலைகளைப் பார்த்து வருகிறார்.

அதன் படி, அந்த 9 வயது சிறுமி, புத்தாண்டு தினத்தன்று, தன்னுடைய உறவினரின் வீட்டிற்கு பூ கொடுக்கச் சென்று இருக்கிறார். 

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நியாய விலைக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வரும் கணேசன் என்பவர், அந்த சிறுமியிடம் சில ஆசை வார்த்தைகள் பேசி தனியாக அழைத்துச் சென்று உள்ளார். அங்கு, ஆட்கள் நடமாட்டம் யாரும் நில்லாத நிலையில், அங்கு வைத்து, அந்த 9 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, பதறிப்போய் அங்கிருந்து போராடி எப்படியே வீட்டிற்கு வந்து, தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து, தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதிருக்கிறார். இதனைக் கேட்ட சிறுமியின் பெற்றோர், இது தொடர்பாக பென்னாகரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இந்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் லதா, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

அத்துடன், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கணேசனை கைது செய்ய போலீசார் அவரது வீட்டிற்குச் சென்றனர். ஆனால், போலீசார் தன்னை கைது செய்ய வருவதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட கணேசன், வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகி உள்ளார். இதனால், போலீசார் அவரை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், தலைமறைவான கணேசனை போலீசார் தற்போது கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், இந்த விசாரணையில் ரேஷன் கடை ஊழியர் கணேசன், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, கணேசனை போச்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர். பின்னர், நீதிமன்ற உத்தரவுப் படி, போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

அதே போல், திருப்பூரில் மனைவியின் கள்ளக் காதலை உறவு விசயம், கணவனுக்குத் தெரிய வந்த நிலையில், கடும் மன உளைச்சலுக்கு ஆளான கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.