சேலத்தில் கிழவியையும் விட்டு வைக்காத காம வெறியர்கள், 60 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, ஆடைகள் களைந்து அரை நிர்வாண கோலத்தில் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டுத் தூக்கி வீசி சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் மல்லூர் அடுத்து உள்ள ஆராங்கல்திட்டு பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதான லட்சுமி, இவரது கணவர் அய்யனார் அந்த பகுதியில் விவசாயம் செய்து வந்தனர். 

இதனிடையே, அய்யனார் - லட்சுமி தம்பதியினருக்குத் திருமணமாகி நீண்ட வருடங்களாகக் குழந்தையே இல்லாத காரணத்தால், தன் தங்கையை தன் கணவருக்கு 2 வதாக திருமணம் செய்து வைத்து விட்டு, லட்சுமி தனியாக வந்து விட்டார்.

இதனையடுத்து, கணவனைப் பிரிந்த மனைவி லட்சுமி, அந்த பகுதியில் உள்ள மல்லூர் அருகே இருக்கும் ஆறங்கால் திட்டு என்ற இடத்தில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தார். இந்த வீடு காட்டுப் பகுதியில் மற்றும் அங்குள்ள நெடுஞ்சாலையின் ஓரமாக அமைந்திருக்கிறது. இந்த வீட்டின் அருகில் வேறு எந்த வீடுகளும் இல்லை. இதனால், லட்சுமி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.

அதே நேரத்தில், இந்த பகுதியில் இயங்கி வரம் கல்குவாரியில் லட்சுமி, தினமும் கூலி வேலைக்குச் சென்று வந்தார். நாளடைவில், அங்கு கூலி வேலைக்கு யாரையும் அனுமதிக்காத காரணத்தால், லட்சுமி ஆடு மற்றும் மாடுகளை வாங்கி வளர்த்து வந்தார். 

இந்நிலையில், எப்போதும் போல் நேற்று மாலை 60 வயதான லட்சுமி, தன் வீட்டின் பட்டியில் அடைத்திருந்த வைத்திருந்த ஆடு, மாடுகளை அவிழ்த்துக் கொண்டு அருகே உள்ள மலைகரடு பகுதிக்கு மேய்ச்சலுக்காகச் சென்று உள்ளார். மாலைப் பொழுது சாய்ந்து, இரவு ஆனதும் ஆடுகள், மாடுகள் மட்டும் ஒவ்வொன்றாக வீடு திரும்பி உள்ளன. ஆனால், லட்சுமி மட்டும் வீட்டிற்கு வரவில்லை. 

இதனால், லட்சுமி வீடு இருக்கும் சற்று தொலைவில் உள்ள ஒரு குடும்பத்தினர், லட்சுமியைத் தேடி அந்த காட்டுப் பகுதிக்குச் சென்று உள்ளனர். ஆனால், எங்குத் தேடியும் லட்சுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து, லட்சுமியின் வீடு மற்றும் வீட்டைச் சுற்றி பகுதிகளில் தேடி உள்ளனர். 

அப்போது, வீட்டின் பின் புறத்தில் லட்சுமி ஆடைகள் முற்றிலும் களைந்த நிலையில், அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இது குறித்து விரைந்து வந்த போலுசார், லட்சுமியின் உடலைப் பார்த்து உள்ளனர். அப்போது, அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

இதனையடுத்து, அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அத்துடன், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் வந்து செல்லும் அனைவரிடமும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த விசாரணையில், லட்சுமியை பலாத்காரம் செய்த மர்ம நபர்கள், பாலியல் பலாத்காரம் செய்த பிறகு, அந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகளையும் கொள்ளை அடித்துவிட்டுச் சென்றதும் தெரியவந்தது.

இதனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கானிகேர், 3 தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லட்சுமி நகைக்காகக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணங்களுக்காகக் கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.