வேளாண் சட்டங்களுக்கு எதிராக சாலை மறியல் போராட்டம் டெல்லியில் நடைப்பெற்று வருகிறது. மேலும் நாட்டின் பிற மாநிலங்களிலும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 12 மணி முதல் 3 மணி வரை போராட்டம் நடைப்பெறும் என்று விவசாயிகள் அறிவித்திருந்த நிலையில் இன்று நாடு முழுவதும் விவசாயிகள் 'சக்கா ஜாம்' போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.


இந்த போராட்டத்தால் டெல்லியில் 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சக்கா ஜாம் சாலைமறியலில் ஈடுபட்ட விவசாயிகள்  கைது செய்யப்பட்டனர். 


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூரில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸ் கைது செய்தது. மேலும் இந்த போராட்டம் நாடு முழுவதும் நடைபெறும் நிலையில் டெல்லி, உத்தரபிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் இந்த போராட்டம் நடைபெறாது என்று முன்கூடியே அறிவித்திருந்தனர்.

சாலை மறியல் போராட்டத்தின் போது பள்ளி வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும், போராட்டத்தின் கடைசி ஒரு நிமிடம் தொடர்ந்து வாகனங்களில் ஒலி எழுப்பப்படும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.