புதிய காதலனுடன் முன்னாள் காதலி இருந்ததைப் பார்த்த கோபத்தில் துறவியாக மாறிய முன்னாள் காதலான் கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தாய்லாந்தை சேர்ந்த 57 வயதான புத்த மதத் துறவி உம் தீரென்ராம், லம்பாய் புவலோய என்ற 33 வயது பெண்ணை, தான் துறவியாவதற்கு முன் காதலித்து வந்துள்ளார். ஆனால், பின்னாலில் அவர் புத்த துறவியானதும் காதலியை பிரிந்து துறவியாக சென்றுவிட்டார்.  

saint kills ex girlfriend seeing her with another man

இதனிடையே, லம்பாய் புவலோய அடிக்கடி துறவி உம் தீரென்ராமிற்கு போன் செய்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், 33 வயது லம்பாயின் வயிற்றில் 57 வயதான தீரென்ராமின் குழந்தை வளர்வதாகவும் கூறப்பட்டது. 

“தற்போது லம்பாய் புவலோய 8 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், இது குறித்து வெளியே சொன்னால், புத்த துறவி தீரென்ராமின் வாழ்க்கையே நாசமாகிவிடும்” என்று லம்பாய் தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக லம்பாய் மீது, துறவி தீரென்ராம் கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

saint kills ex girlfriend seeing her with another man

இந்நிலையில், துறவி தீரென்ராம் தனது வேனில் வந்துகொண்டிருக்கும்போது, அவரது முன்னாள் காதலியான லம்பாய், தன்னுடைய புதிய காதலனோடு அவரனது வீட்டின் வெளியே நெருக்கமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

இதனைப்பார்த்த அதிர்ச்சியடைந்த துறவி தீரென்ராம், தனது வேனால் அவர்களது வீட்டின் முன்பு இருந்த காரை மோதி உள்ளார். இதனால், பயந்துபோன லம்பாயின் புதிய காதலன் பயந்துபோய், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான்.

saint kills ex girlfriend seeing her with another man

இதனையடுத்து, தன் வேனிலிருந்த கத்தியை எடுத்துக்கொண்டு, லம்பாயை கண்மூடித்தனமாகக் குத்தி உள்ளார். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், வலம்பாயை கொலை செய்த குற்றத்திற்காகத் துறவி தீரென்ராமை அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, 33 வயதான முன்னாள் காதலி வேறொருவருடன் இருப்பதைக் கண்ட துறவி, அவர் 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தும் ஆத்திரத்தில் அந்த பெண்ணை குத்தி கொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.