திருமணத்திற்கு மேட்ரிமோனியல் வரன் தேடுபவர்கள் ஏமாராமல் இருக்கும் வகையில், முன்னெச்சரிக்கையாக சில விசயங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.. 

திருமணத்திற்காக வரன் தேடுவோர் தரகர் மூலமாக பெண் - மாப்பிள்ளை பார்த்த காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. தற்போது, அனைவரும் திருமணத்திற்கு மேட்ரிமோனியை நாடிச் செல்கின்றனர்.

பலரும் திருமணத்திற்கு மேட்ரிமோனயை நாடிச் செல்வதைத் தெரிந்துகொண்ட சில விசமிகல், இதில் திருட்டுத் தனம் பண்ணி ஏமாற்றி பணம் சம்பாதிக்கக் 

களமிறங்கி உள்ளனர். இதனால், மேட்ரிமோனியல் நடைபெறும் தில்லாலங்கடியில் சிக்கிக்கொள்ளாமல் சாமர்த்தியமாக இருப்பது எப்படி என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.

Safety tips for Matrimonial site users

திருமணத்திற்காக மேட்ரிமோனியல் பதிவு செய்தவர்களில் சிலர் போலியான நபர்கள் இருக்கிறார்கள். அவர்களை, அவர்களது புகைப்படத்தை வைத்து நாம் எளிதில் கண்டுப்பிடித்துவிட முடியும்.

அந்த பதிவில், குறிப்பிட்ட நபரின் புகைப்படமே இல்லை என்றால், அது போலியான கணக்கு என்பதை உணர்ந்து, அந்த நபரை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

சில புகைப்படங்கள் கம்யூட்டர் மூலமாக எடிட்டிங் செய்யப்பட்டிருப்பதைப் போல் இருக்கும். அவற்றையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். 

அதேபோல், சுயவிவரத்தில் குறிப்பிடப்படும் தனிப்பட்ட விசயங்கள் குறித்து, நாம் தெரிந்தவர்களிடம் விசாரிப்பது மிகவும் அவசியம்.

Safety tips for Matrimonial site users

மேலும், சுயவிவரத்தில் சந்தேகப்படும் படியும், நம்ப முடியாத வகையில் சில தகவல்கள் இடம் பெற்றிருந்தால், அந்த நபரைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

சுயவிவரத்தில், ஒருவர் அடிக்கடி குறிப்பிட்ட விசயத்தை மாற்றி மாற்றிப் பதிவு செய்கிறார் என்றால், நிச்சயம் அவர் தவறான நபர் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

குறிப்பாக, மேட்ரிமோனியல் தளங்கள் மூலமாக அறிமுகம் ஆகும் நபர்கள் பண உதவிகளை எதிர்பார்க்கிறார்கள் அல்லது கேட்கிறார்கள் என்றால், அவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

அதுபோல், மேட்ரிமோனியல் மூலமாக ஒரு முறை அறிமுகம் ஆனாலோ அல்லது நேரில் சந்தித்துப் பேசினாலோ, அவர்களை வெளியில் தனிப்பட்ட முறையில் சந்திப்பதைத் தவிர்ப்பது நலம். அவர்கள் தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், வீட்டில் உள்ளவர்களிடம் விசயத்தைச் சொல்லிவிடுவது நிகழப்போகும் பிரச்சனைகளை, நிகழவே விடாமல் செய்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

முகம் தெரியாத நபர்களுடன் எச்சரிக்கையாக இருப்போம். மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம்.