தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ.10 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என ஜோதிமணி எம்.பி  மத்தியஅரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.


தமிழகத்தில் கடந்த சில நாட்டகளாக பருவ மழை தொடர்ந்து  பெய்துவருகிற  நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். மேலும், சாலை போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தென்மேற்கு வங்ககடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில்  அதி கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் தென் கிழக்கு வளைகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

jothimaniஇந்நிலையில் தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக மட்டும் ரூ.10ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். அதன் பின்னர், நிலுவையிலுள்ள நிதிகளையும் வழங்க வேண்டும் என்றார். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் தலையிட்டு ஆய்வு மேற்கொள்ளும் ஆளுநர், தற்போதைய வெள்ளப் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசிடமிருந்து பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஜிஎஸ்டி வரி நிலுவையில் உள்ளது. தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பயனாளிகளுக்கான ஊதியம் கடந்த 30 நாள்களுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருகிறது என மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கூறினார்.

அதனை தொடர்ந்து மக்களவை உறுப்பினர் அலுவலக திறப்பு விழா வேடசந்தூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இது திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி கரூர் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது. அப்போது சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.காந்திராஜன் (திமுக), காங்கிரஸ் வட்டாரத் தலைவர்கள் சாமிநாதன், தர்மர் ஆகியோர் உடனிருந்தனர். அலுவலகத்தை திறந்து வைத்த கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது கடந்த மக்களவைத் தேர்தலின்போது, நான் வெற்றிப் பெற்றால் வேடசந்தூரில் மக்களவை உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தேன். அதனை நிறைவேற்றும் வகையில் தற்போது அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வந்தாலும், வேடசந்தூர் அலுவலகத்தில் பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை மக்களை சந்தித்து குறைகள் கேட்கப்படும் என்று மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்தார்.