சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை உரியா நேரத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களுக்கு ரூ.5000/- பரிசாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

சாலை விபத்து என்பது தற்போது அடிக்கடி நடைபெறுகிறது. அதிவேகத்தில், திட்டமிடாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டும் என்ற அவசரம், கவனமின்மை உள்ளிட்ட காரணங்களால் நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த சாலை விபத்துக்கள் பெருமளவில் குறைந்துள்ளன. 

எனினும் தற்போதெல்லாம் சாலை விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதை விட அவர்களை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றுவதை தான் பலரும் குறிக்கோளாக வைத்துள்ளனர்.  இதனால் பொன்னான நேரத்தில் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.

ACCIDENT TRANSPORT REWARD

இவ்வாறு நடப்பதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சரியான நேரத்தில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு 5000 ரூபாய் பரிசு வழங்கும் திட்டத்தை இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்தது. 

இந்த திட்டத்தை தமிழக போக்குவரத்துத் துறை செயல்பாட்டிற்கு  கொண்டு வந்துள்ளது. சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோரை ஊக்குவிக்கும் வகையில் 5000 ருபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

"சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான நேரத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களுக்கு ரூ.5000/- பரிசாக வழங்கப்படும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவசரகால உதவியினை பொதுமக்கள் செய்யவேண்டும் என்பது ஆகும். ஒரு ஆண்டில் அதிகபட்சம் 5 முறை ஒரு நபருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். 

ACCIDENT TRANSPORT REWARD

சாலை விபத்து நடந்த பின் காவல்துறையினர் அவ்விடத்தை பார்வையிட்டு விபத்தின் தன்மை குறித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவிப்பர். அனைத்து விபத்துக்களையும் மாவட்ட ஆட்சியரது தலைமையின் கீழ் இயங்கும் மாவட்ட அளவிலான மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும். இதில் தெரிவு செய்யப்படும் நேர்வுகள் ரூ.5000 பரிசுத் தொகை வழங்குவதற்காக போக்குவரத்து துறை ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உதவி தொலைபேசி எண்கள்

                 சேவை                                                                 தொலைபேசி எண்கள்

காவல் கட்டுப்பாட்டு அறை                                          100

தீ தடுப்பு, பாதுகாப்பு                                                         101

விபத்து அவசர வாகன உதவி.                                      102

போக்குவரத்து காவலர்                                                    103

விபத்து உதவி எண்                                                           108

பேரிடர் கால உதவி                                                           1077

குழந்தைகள் பாதுகாப்பு                                                     1098

பெண்கள் ஹெல்ப்லைன்                                                  1091

லயன்ஸ் ப்ளட் பேங்க்                                                         28415959

செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் அசோசியேஷன்       28194630

சென்னை கார்ப்பரேஷன் புகார்கள்                                    1913

ரயில்வே முன்பதிவு விசாரணை                                       132

தானியங்கி ரயில்வே முன்பதிவு வினவல்                      139

சுற்றுலா வினவல்                                                                   1913

அரசின் சுற்றுலா அலுவலகம். தமிழ்நாடு                          25368538

அரசின் சுற்றுலா அலுவலகம். இந்தியாவில்                    28460285

பிஎஸ்என்எல் தொலைபேசி டைரக்டரி வினவல்            197

பிஎஸ்என்எல் தொலைபேசி உள்ளூர் உதவி                      199

கண் வங்கி                                                                                    1919

எரிவாயு ஹெல்ப்லைன்                                                            1716