பிரபல ஆபாசப் பட நடிகர் ரான் ஜெர்மி, 4 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆபாசப் படங்களில் நடித்தது மூலமாகவே மட்டுமே பெரும்பாலானவர்களால் அறியப்பட்டுப் புகழ் பெற்றுத் திகழ்ந்தவர் ரான் ஜெர்மி.

 Ron Jeremy accusation sexual assault by actor on four women

குறிப்பாக, 67 வயதான ரான் ஜெர்மி, கடந்த 1970 ஆம் ஆண்டுகளில் ஆபாசப் படங்களில் நடித்து உலகப் புகழ் பெற்றுத் திகழ்ந்தார். ஆபாசப் பட உலகில் இதுவரை சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, அனைவராலும் அறியப்பட்டவராகத் திகழ்ந்து வருகிறார்.  

இதனிடையே, கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டிற்குள்ளான கால கட்டத்திற்குள் ரான் ஜெர்மி,  4 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

Ron Jeremy accusation sexual assault by actor on four women

கடந்த 2014 ஆம் ஆண்டில் 25 வயதான பெண் ஒருவரைத் தனது வீட்டிற்கு வரவழைத்து, ரான் ஜெர்மி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல், கடந்த 2017 ஆம் ஆண்டு 2 பெண்களையும், 2019 ஆம் ஆண்டு ஒரு பெண்ணையும் வன்கொடுமை செய்ததாக ரான் ஜெர்மி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Ron Jeremy accusation sexual assault by actor on four women

இந்த பாலியல் பலாத்கார வழக்கில் தற்போது ரான் ஜெர்மி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் கிட்டத்தட்ட 90 ஆண்டுகள் வரை அவருக்குத் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள ரான் ஜெர்மி, “நான் இதுவரை ஒரு பெண்ணையும் பாலியல் பலாத்காரம் செய்ய வில்லை என்றும், நான் குற்றவாளி இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.