தமிழக அரசுக்கு வருவாயாக கிடைக்கும் ஒவ்வொரு ஒரு ரூபாயில் இருந்தும், மாநில அரசு வசூலிக்கும் வரிகள் மூலமாக அதிக பட்சமாக 61 காசுகள் வருமானமாக 
கிடைப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

2020-21 ஆம் நிதியாண்டின் நிதி நிலை அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், பல்வேறு தகவல்கள் வெளிப்படையாகவே தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன. 

அதில், தமிழக அரசுக்கு கிடைக்கும் ஒவ்வொரு ஒரு ரூபாயில் இருந்தும், மாநில அரசு வசூலிக்கும் வரிகள் மூலமாக அதிக பட்சமாக எவ்வளவு வருவாய் 
கிடைக்கிறது என்றும், எவ்வளவு செலவாகிறது என்பது பற்றிய தகவல்களும் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன. அந்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

அதன் படி, இந்த நிதி நிலை அறிக்கையில், “தமிழக அரசு அதிகமாகக் கடன் வாங்கி செலவு செய்து உள்ளதாக” இந்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுக்கிறது. 

அதே நேரத்தில், 2020 - 21 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் படி, “தமிழக அரசின் வரவு செலவுகளில், அரசுக்கு வருவாயாகக் கிடைக்கும் ஒவ்வொரு ஒரு ரூபாயில் இருந்தும், மாநில அரசு வசூலிக்கும் வரிகள் மூலமாக அதிக பட்சமாக 61 காசுகள் வருமானமாகக் கிடைக்கிறது” என்பது தெரிய வந்திருக்கிறது. 

“மத்திய அரசு வசூலுக்கும் வரிகளின் மூலமாக 15 காசுகள் மட்டுமே, தமிழக அரசுக்கு வருவாயாகக் கிடைப்பதும்” இதன் மூலமாகத் தெரிய வந்திருக்கிறது.

குறிப்பாக, “தமிழக அரசிக்குக் கிடைக்கும் ஒவ்வொரு ஒரு ரூபாய் வருவாயிலும், மத்திய அரசின் மானியம் மூலமாக 17 காசுகள் மட்டுமே கிடைத்து வருகிறது. 

அதே போல், “மாநில அரசின் இதர வருவாய் ஒரு ரூபாய்க்கு வெறும் 7 காசுகள் என்றும்” அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதில், குறிப்பிடப்பட்டு உள்ள செலவு கணக்கைப் பார்க்கும் போது, “மாநில அரசுக்கு வரும் ஒவ்வொரு ஒரு ரூபாயிலும் அரசு ஊழியர்களுக்கு ஊதியமாக 23 காசுகள் செலவிடப்பட்டு வருவதும், அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக 11 காசுகள் ஒதுக்கப்பட்டு வருவதும்” இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது.

“பராமரிப்பு செலவுகளுக்காக ஒரு ரூபாய் வருவாயில் 5 காசுகளை” தமிழக அரசு செலவிட்டு வருகிறது. 

அதே போல், “விவசாயம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளுக்கான மானியத்திற்காகவும், உதவித் தொகை உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து மொத்தமாக 34 காசுகள் மட்டுமே செலவிடப்பட்டு உள்ளதாகவும்” இந்த நிதி நிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

முக்கியமாக, “தமிழக அரசு பெற்ற கடன் தொகையின் வட்டிக்காக, ஒரு ரூபாயில் 13 காசுகள் செலவிடப்பட்டு இருப்பதாகவும், மூலதன செலவுகள் 13 காசுகள் என்றும் முன் பணத்திற்காக ஒரு ரூபாய்க்கு 1 காசுகள் செலவிடப்பட்டு உள்ளதாகவும்” வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தமிழக அரசுக்கு வரும் ஒவ்வொரு ஒரு ரூபாயின் வரவும் - செலவும் பற்றிய இந்த செய்திகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.