தமிழகத்திற்கு நவம்பர் 10-ஆம் தேதி மட்டும் இந்திய வானிலை மையம் ‘சிகப்பு எச்சரிக்கையை’ விடுத்துள்ளது.

வடதமிழக கடலோரத்தில் வளிமண்டல மேலடுக்கு நிலவுவதால் சென்னை உள்பட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே காட்டாற்று வெள்ளம் போன்று மழை நீர் கரைபுரண்டு ஓடுகிறது. 

குறிப்பாக சென்னையில் நேற்று முந்தினம் முதல் நேற்று காலை வரையிலான நேரத்தில் 200 மி.மீ அளவு மழை பெய்துள்ளது. சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரையை நெருங்கும். 

இதனால் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நவம்பர் 10-ஆம் தேதி மட்டும் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாளை வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. 

r1

நாளை உருவாகும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வருகிற 11-ஆம் தேதி அதிகாலை வட தமிழக கடற்கரையை நெருங்கும். இதனால் தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் நவம்பர் 10 ,11-ம் தேதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

ஆகையால் நாளை மறுநாள் மற்றும் அதற்கு அடுத்த நாள் நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது. ’ என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

r2

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் அறிவித்துள்ளது. நவம்பர் 10-ம் தேதி தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுத்துள்ளது. 

அன்றைய தினம் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, ஏனாம் பகுதிகளிலும் அதி தீவிர  கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மணிக்கு 45-55 முதல் 65 வரையிலான வேகத்தில் காற்று பலமாக வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

♦ Fisherman warning: Squally weather (speed reaching 45-55 kmph gusting to 65 kmph) very likely over Eastcentral and adjoining Westcentral Arabian sea and speed reaching 40-50 kmph gusting to 60 kmph during next 24 hours. Fishermen are advised not to venture into these areas.

— India Meteorological Department (@Indiametdept) November 8, 2021