தனியார் பள்ளி ஆசிரியையை செருப்பால் அடித்து உதைத்த காவலர்! சிசிடிவி காட்சி வெளியானதால் அதிர்ச்சி
பள்ளி ஆசிரியை ஒருவரை காவலர், தனது காலணியால் அடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அய்யனார் நகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் - லதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். லாதா, தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இவர்களது மகன் தினேஷூக்கும், மதுரையைச் சேர்ந்த வினோதினி என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு முறைப்படி திருமணம் நடைபெற்று உள்ளது.
இந்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு தற்போது 4 வயதில் ஒரு பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. இவர்கள் இருவரும், மதுரையில் வசித்து வந்து வந்திருக்கிறார்கள்.
இந்த சூழலில், தினேஷின் தாயார் லதா, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மதுரையில் சொந்தமாக வீடு கட்டி குடியேறி உள்ளார். இந்த வீட்டை, தினேஷின் மனைவி
வினோதினி, தன் கணவரிடம் கேட்டு பிரச்சனை செய்து வந்திருக்கிறார்.
இதனால், கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனை வெடித்து உள்ளது. இதன் காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் பிரிந்து உள்ளனர். வினோதினி, தனது தாயார் வீட்டிற்கு சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், வினோதினி மற்றும் அவரது உறவினர் விருதுநகர் புதுப்பட்டியில் காவலராக பணிபுரியும் காவலர் கணேசன் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து பரமக்குடியில் உள்ள லதாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
அதன் பிறகு, தினேஷிடம் வலுக்கட்டாயமாகப் பத்திரத்தில் கையெழுத்து கேட்டு மிரட்டிய நிலையில், அவரிடம் கையெழுத்தும் பெற்று உள்ளனர்.
அத்துடன், அந்த காவலர் லதாவையும் பத்திரத்தில் கையெழுத்துப் போட சொல்லி ஆபாசமாகத் திட்டி மிரட்டி இருக்கிறார். ஆனாலும், ஆசிரியர் லதா, அதில் கையெழுத்துப் போட மறுத்து உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த காவலர், ஆசிரியர் லதாவை, பட்டப்பகலில், நடுரோட்டில் வைத்து செருப்பால் அடித்து உதைத்து உள்ளார். இதனால், லதா அலறித்துடிதது உள்ளார்.
மேலும், இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதனையடுத்து, அந்த காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட ஆசிரியர் லதா, பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், செருப்பால் அடித்த காவலர் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும்,
பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.