“தமிழக அரசு 4,5 மாதங்களில் கலைந்துவிடும் என 99 சதவீதம் பேர் சொன்னார்கள் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான  கமல்ஹாசன், திரையுலகில் தடம் பதித்து 60 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், “உங்கள் நான்” என்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Rajinikanth - kamal

இதில், திரையுலக ஜாம்பவான்களான நடிகர் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, கார்த்தி, வடிவேலு, இசையமைப்பாளர் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர்கள் சங்கர், மணிரத்னம், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “கடந்த காலங்களில் தமிழக அரசு 4 அல்லது 5 மாதங்களில் கலைந்துவிடும் என்று சொன்னார்கள். ஆனால், அதிசயம் நடந்தது. தடைகளைத் தாண்டி, ஆட்சி தற்போது வரை நீடித்து வருகிறது. அதேபோன்று அதிசயம் இன்று நடக்கிறது. நாளையும் நடக்கும்” என்று எதையோ குறிப்பிட்டு பேசினார். இதனால், ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர்.

Rajinikanth - kamal

தொடர்ந்து பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், “ரஜினியும் - கமலும் அரசியலில் இணைந்தால் தமிழகமும், தமிழக மக்களும் பயன்பெறுவார்கள்” என்று குறிப்பிட்டார். தற்போது நடிகர் ரஜினிகாந்த் பேசியது, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.