சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையே கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கிக்கொண்டிருக்கும் நிலையில், நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளன. இதனால், சென்னையே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. 

Rajinikanth house bomb threat

இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இன்று காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்தது.

மேலும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தகவல் கூறி மிரட்டல் விடுத்த மர்ம நபர், வேறு எந்த விவரங்களையும் செல்லாமல் தொடர்பை அப்படியே துண்டித்துவிட்டார். 

Rajinikanth house bomb threat

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கு விரைந்தனர். 4 வெடிகுண்டு நிபுணர்கள், 2 மோப்ப நாய்களுடன் போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்று தீவிரமாக சோதனை நடத்தினர். 

அத்துடன், நடிகர் ரஜினிகாந்த்தின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு அருகில் உள்ள அனைத்து இடங்களிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் சோதனை செய்தனர். 

இந்த சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், போலீசாருக்கு வந்த தகவல் பொய்யானது என்று போலீசார் உறுதி செய்தனர். இதனையடுத்து, இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், போன் செய்த மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.