3 மனைவிகள், 11 பிள்ளைகள் இருந்தும் அடங்காத காமவெறியால் மனைவியைக் கொன்று பெற்ற மகளை, தந்தையே அடையத் துடித்த சம்பம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டைச் சேர்ந்த முருகேசன், கடந்த காலங்களில் அப்பகுதியில் சாராயம் காய்ச்சி விற்று வந்துள்ளார். இதனால், பல்வேறு பகையையும் அவர் சம்பாதித்துக்கொண்டார். இதனால், முருகேசனுக்கு எதிரிகள் அதிகமானார்கள்.

Pudhukottai man murders mother to sexually assault daughter

ஒரு கட்டத்தில் அவருக்கு உயிர் பயம் வரவே, தான் செய்து வந்த சாராய வியாபாரத்தை அப்படியே விட்டுவிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் தேனிப்பட்டி கிராமத்தில் தஞ்சமடைந்தார்.

அவர் சாராய வியாபாரியாக இருக்கும்போது திருமணம் செய்திருந்த நிலையில், அதன் பிறகும் வரிசையாகத் திருமணம் செய்துகொண்டார். 

இதனால் முருகேசனுக்கு; மனோன்மணி, பானுமதி, தனலட்சுமி என்று 3 மனைவிகள் உள்ளனர். அவர்கள் 3 பேருக்கும் சேர்த்து மொத்தம் 11 பிள்ளைகள் உள்ளனர்.

Pudhukottai man murders mother to sexually assault daughter

3 மனைவிகள் இருந்தாலும், முருகேசனின் தீராத காமவெறியால் பயந்துபோன 3 வது மனைவி தனலட்சுமி சண்டைபோட்டுக்கொண்டு, தனது குழந்தைகளுடன், அம்மா வீட்டிற்கே சென்றுவிட்டார்.

இதனால், முருகேசனின் முதல் மனைவி மனோன்மணியும், 2 வது மனைவி பானுமதியும் அருகருகே வீடுகளில் வசித்து வருகின்றனர். முருகேசன் வேலைக்குச் செல்லாமல் பெண்கள் பின்னால் தொடர்ந்து சுற்றுவதையே வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.

இதனால் மனோன்மணியும், பானுமதியும் வேலைக்குச் சென்று குழந்தைகளைக் காப்பாற்றியும், முருகேசனுக்குச் சாப்பாடும் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பானுமதியின் மூத்த மகள் 12 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, அப்பகுதியில் நடைபெறும் கச்சேரிகளுக்குச் சென்று பாடல் பாடி வந்தார். மகளுக்குத் துணையாக முருகேசன் சென்று வந்தார்.

அப்போது, மேடையில் மகளுக்குக் கிடைக்கும் பேரையும், புகழையும் பார்த்து மகள் மீது காம ஆசை வந்துள்ளது. மகளையும் அடையத் துடித்துள்ளார். அதன்படி, திட்டமிட்டு தனது செல்போனில் ஆபாசப் படங்களைப் போட்டு மகளிடம் காட்டுவார். அந்த பெண்ணும் அதைப் பார்க்காமல் தவிர்த்து வந்துள்ளார். 

Pudhukottai man murders mother to sexually assault daughter

ஒருநாள் கச்சேரிக்குச் சென்றுவிட்டு, பேருந்தில் திரும்பி வந்துகொண்டிருக்கும்போது, மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மகள், இதுபோன்று செய்தால் அம்மாவிடம் சொல்லிவிடுவேன் என்று எச்சரித்துள்ளார்.

அடுத்த நாள் குடித்துவிட்டு முருகேசன் வீட்டிற்கு வந்தபோது, மகள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, மகள் என்றுகூட பாராமல் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய அவர் மீது பாய்ந்துள்ளார். மகளிடம் அவர் மல்லுக்கட்டி உள்ளார்.

இதனால், பயந்துபோன அந்த இளம் பெண், பயத்தில் அலறி கூச்சலிடவே, அக்கம் பக்கத்திலிருந்தவர்களும், அவரது முதல் மனைவியும் வந்து, அந்த பெண்ணை மீட்டுள்ளனர்.

இந்த தகவல் வீடு திரும்பிய முருகேசனின் 2 வது மகளுக்குத் தெரிய வந்தது. இதனால், மகளைச் சீக்கிரம் சீக்கிரமா திருமணம் செய்துகொடுக்க அவர் மாப்பிள்ளை பார்த்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த முருகேசன் மனைவி கொலை செய்து, மகளை அடைய வட்டம்போட்டுள்ளார். அதன்படி, அடுத்த சில நாட்களில் மழை பெய்துகொண்டிருக்கும்போது, அவரது மனைவி அங்குள்ள ஒதுக்குப் புறமான பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது, அங்குச் சென்ற அவர், ஆட்டிற்குப் புல் அறுக்கும் அரிவாளை எடுத்து, 2 வது மனைவி பானுமதியைச் சரமாரியாக வெட்டி உள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரித்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், ஒன்றும் தெரியாததுபோல் வீட்டில் நாடகமாடி முருகேசன் அழுது புலம்பி உள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், முருகேசன் மீது சந்தேகப்பட்டனர்.

இது தொடர்பாக முருகேசனை அழைத்துத் தனிப்பட்ட முறையில் விசாரித்தபோது, மகளை அடைய நினைத்து, மனைவியைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

Pudhukottai man murders mother to sexually assault daughter

இதனைத்தொடர்ந்து, முருகேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர். இதனிடையே, தந்தையே.. பெற்ற மகளை அடைய, மனைவியைக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

காமத் தீ பற்றி எரிந்தால், அது தன்னை மட்டுமில்லை சுற்றத்தாரையும் சுட்டு எரிக்கும் என்பதற்கு, புதுக்கோட்டை வறண்ட மண்ணில் நடந்த இந்த சம்பவமே ஒரு நேரடி சாட்சி.