போலீசார் லீவு எடுக்கத் தடை விதித்து டிஜிபி திரிபாதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாடே எதிர்பார்க்கும் அயோத்தி வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கர் நிலத்தை, உரிமை கோருவது தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த 40 நாள்களாக தொடர்ந்து விசாரித்து வந்தது. 

TN Police

இதனையடுத்து, இந்த வழக்கின் அனைத்துவிதமான வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு அறிவிக்கப்பட இருக்கிறது. குறிப்பாக, இந்த வழக்கில் வரும் 13 ஆம் தேதி, தீர்ப்பு வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழகத்திலும் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

TN Police

இதனால், தீர்ப்பு வெளியாகும் அன்றும், அதன் பிறகு சில நாட்களுக்கும் தமிழகம் முழுவதும் பல லட்சம் போலீசார், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. அதனால், வரும் 10 ஆம் தேதி முதல் காவல்துறையினர் விடுப்பு எடுக்க அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மறு உத்தரவு வரும் வரை, காவல்துறை அதிகாரிகள் விடுப்பு எடுக்கக் கூடாது என்று தமிழக டிஜிபி  திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன், ​​​​​​​அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.