காதலிப்பதாகக் கூறி சிறுமியை அழைத்துச் சென்று வீட்டில் அடைத்து வைத்த காதலன் ஒருவன், தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் காதல் என்னும் பெயரில் பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்து உள்ள ஆனந்த பாலம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான ஆல்டோ மைக்கேல் என்ற இளைஞர், படித்து முடித்துவிட்டு, வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இப்படியான நிலையில் தான், 21 வயதான ஆல்டோ மைக்கேல், அங்குள்ள குளச்சல் அடுத்து உள்ள வாணியங்குடி பகுதியைச் சேர்ந்த 18 வயது கூட ஆகாத சிறுமி ஒருவரைக் காதலிப்பதாக, அந்த சிறுமியை பின் தொடர்ந்து சென்று காதல் டார்ச்சர் செய்திருக்கிறார். 

தொடக்கத்தில் ஒதுங்கி ஒதுங்கிச் சென்ற அந்த சிறுமி, ஒரு கட்டத்தில் 21 வயதான ஆல்டோ மைக்கேலின் காதல் டார்ச்சர் தாங்காமல், அவர் வலையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த இளைஞனை நம்பிய அந்த சிறுமி, அவருடன் பழகி வந்தார் என்றும் கூறப்படுகிறது.

இப்படியாக, அந்த சிறுமியிடம் நாளுக்கு நாள் புது புது ஆசை வார்த்தைகளைக் கூறி வந்த ஆல்டோ மைக்கல், அந்த சிறுமியை நம்ப வைத்து, ஏமாற்றி தனியாக அழைத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறார்.

அதன் படி, தன் காதலியான அந்த சிறுமியிடம் பொய்யான வாக்குறுதிகளை அள்ளிய வீசிய அந்த காதலன், அந்த சிறுமியை முற்றிலுமாக நம்ப வைத்து, கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டிபுரம் பகுதியில் உள்ள உலக்கை அருவிக்கு அழைத்துச் சென்று உள்ளார். 

முதலில் அந்த அருவி இருக்கும் பகுதியைச் சுற்றிப் பார்த்துவிட்டு, அதன் பிறகு அங்கு அருகில் உள்ள ஒரு வீட்டிற்கு அந்த சிறுமியை அந்த காதலன் மைக்கேல் அழைத்துச் சென்றிருக்கிறார்.

அந்த வீட்டிற்குச் சென்ற அந்த சிறுமிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்து உள்ளது. அந்த வீட்டில் மைக்கேலின் நண்பர்கள் 3 பேர் ஏற்கனவே வந்து காத்திருந்தனர். 

அத்துடன், காதலன் மைக்கேல், தனது நண்பர்களுடன் 2 நாட்களாக அந்த சிறுமியைத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறான். இப்படியாக, கடந்த 2 நாட்களில், மைக்கேல் மற்றும் அவனது 3 நண்பர்களும் சேர்ந்து அந்த சிறுமியை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

அதே நேரத்தில், சிறுமியைக் காணவில்லை என்று, அவரது பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்து, அதன் படி, அந்த இடத்திற்கு வந்து காதலன் ஆல்டோ மைக்கேல் மற்றும் அவனது நண்பர்கள் 3 பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர்களைச் சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.