மச்சினிச்சியைக் கத்தியைக் காட்டி மிரட்டியே, மாமன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை தாம்பரம் அடுத்து உள்ள பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி உடன் வசித்து வந்தார். இவர்களுடன், மனைவியின் தங்கையான 19 வயது இளம் பெண்ணும், மாமியாரும் உடன் வசித்து வந்தனர்.

இப்படி, பல ஆண்டுகள் இவர்கள் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர். அப்போது, மனைவியின் தங்கையான மச்சினிச்சி மீது, அந்த மாமனுக்கு சபலம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த மார்ச் 5 ஆம் தேதி, அந்த மனைவியும், அவரின் மாமியாரும் வெளியே கடைக்குச் சென்றிருந்தனர். அப்போது, வீட்டில் மனைவியின் தங்கையான 19 வயது இளம் பெண் மட்டும் தனியாக இருந்து உள்ளார். அப்போது, அந்த இளம் பெண்ணின் மாமன், அதாவது அக்காவின் கணவன், அந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, கத்தி முனையில் அந்த மச்சினிச்சியை அவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

இதனையடுத்து, அந்த நபர் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். ஆனால், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான அந்த இளம் பெண் மட்டும் வீட்டில் அழுதுகொண்டு இருந்து உள்ளார். அப்போது, அந்த பெண்ணின் அக்காவும், தாயாரும் கடையில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.

அப்போது, “மாமா, என்னை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்” என்று, கூறி அழுதுள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த நபரின் மனைவியும், மாமியாரும் இது தொடர்பாக அந்த நபரின் மனைவியே தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். 

இந்தப் புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர், வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அந்த நபரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இதனையடுத்து, பெருங்களத்தூர் பகுதியில் அந்த நபர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக, அங்கு விரைந்து சென்ற போலீசார், அந்த நபரை கைது காவல் நிலையம் அழைத்து வந்தனர். 

தீவிர விசாரணைக்குப் பிறகு, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன் பிறகு, போலீசார் அவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.