கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த தன்னுடைய குழந்தையைத் தந்தையே கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் எம்.ஆர்.சி. நகரைச் சேர்ந்த சரவணன் - அன்பரசி தம்பதிக்குக் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், 5 வயதில் தனுஷ்காஸ்ரீ என்ற பெண் குழந்தையும், 2 வயதில் மேகனாஸ்ரீ என்ற பெண் குழந்தையும் இருந்தனர்.

சரவணன் - அன்பரசி, கணவன் மனைவி இருவருமே அங்குள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பேராசிரியர்களாகப் பணியாற்றி வந்தனர். 

perambalur Father who killed a Own baby

இதனிடையே, அன்பரசிக்கு இரண்டுமே பெண் குழந்தைகள் பிறந்ததால், 2 வது குழந்தை பிறந்தது முதல் கணவர் சரவணன், அவர் தயார் மற்றும் நாத்தனார் ஆகியோர் அன்பரசியை தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளனர்.

இதனையடுத்து, சரவணன் தான் பணிபுரியும் கல்லூரியிலேயே பணியாற்றும் மற்றொரு பெண்ணுடன் தவறாக பழகி வந்துள்ளார். அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, இருவரும் மணிக்கணக்காக போனில் பேசுவதும், வாட்ஸ்ஆப்பில் சாட்டிங் செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். 

perambalur Father who killed a Own baby

இந்நிலையில், சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த சரவணன், மனைவி அன்பரசியிடம் தகராரில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அன்பரசியையும், அவரது மகள் மேகனாஸ்ரீயையும் ஏற்கனவே திட்டமிட்டது போல், சண்டைபோட்டுக்கொண்டே, வீட்டின் பின்பக்கம் உள்ள கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, பயத்தில் அன்பரசி சத்தம்போட்டுக் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அன்பரசியை மீட்டுள்ளனர். ஆனால், அதற்குள் குழந்தை மேகனாஸ்ரீ கிணற்றுக்குள்ளேயே முச்சி முட்டி பரிதாபமாக உயிரிழந்தது. 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சரவணன் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

perambalur Father who killed a Own baby

இதனிடையே, கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த தன்னுடைய குழந்தையை, தந்தையே கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சரவணா, ஏன் இந்த காம வெறி?