கத்தியை முனையில் மிரட்டி இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக பிரமுகர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள பூலாம்பாடியை சேர்ந்த வினோத் என்பவர், பூலாம்பாடி அதிமுக நகர செயலாளராக செயலாற்றி வந்தார்.

அந்த பகுதியில் செல்வாக்கு மிக்க அரசியல் பிரமுகராக வலம் வந்த வினோத், தனது கட்சி சார்ந்த பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

இந்த சூழலில் தான், பூலாம்பாடியை சேர்ந்த தனியார் எரிவாயு நிறுவனம் நடத்தி வரும் திருமணம் ஆன இளம் பெண் ஒருவருக்கு, அதிமுக பிரமுகர் வினோத், அடிக்கடி பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

அத்துடன்,  திருமணம் ஆன இளம் பெண்ணின் செல்போனுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு, அந்த அதிமுக பிரமுகர் வினோத், மிகவும் ஆபாசமாக பேசி, அவருக்கு தொடர்ந்து பாலியல் டார்ச்சர் கொடுத்து வந்தார் என்கிற குற்றச்சாட்டும், அவர் மீது சுமத்தப்படுகிறது.

இப்படியான சூழலில் தான், நேற்றைய தினம் மாலை நேரத்தில் அந்த பெண் தனது வீடு இருக்கும் சாலையில் நடந்துச் சென்றுக்கொண்டு இருந்து உள்ளார்.

அப்போது, அங்கு திடீரென்று வந்த அதிமுக பிரமுகர் வினோத், அந்த பெண்ணை சட்டென்று வழி மறித்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி அந்த இளம் பெண்ணை மிரட்டி, அவருக்கு அங்கேயே பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. 

அப்போது, மிரட்டலின் உச்சமாக, “நீ என் ஆசைக்கு இணங்க மறுத்தால், எரிவாயு நிலையத்தில் வைத்து உன்னை உயிரோடு கொழுத்தி விடுவேன்” என்றும், அந்த பெண்ணை வினோத் மிக கடுமையாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், பயத்தில் அங்கேயே சத்தம் போட்டு கத்தி கூச்சலிட்டு உள்ளார். 

இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், வினோத்திடமிருந்து அந்த பெண்ணை அதிரடியாக மீட்டனர்.

மேலும், இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண், அங்குள்ள அரும்பாவூர் காவல் நிலையத்தில் அதிமுக நகர செயலாளர் வினோத் மீது பாலியல் புகார் அளித்தார்.

பாதிக்கப்பட்ட இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த புகாரைத் தொடர்ந்து, அதிமுக பிரமுகர் வினோத்தை அதிரடியாக போலீசார் தற்போது கைது செய்து உள்ளனர். 

அத்துடன், கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் வினோத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.