வெள்ள நிவாரணப் பணிகளில் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுவது போல மக்கள் நினைப்பதாக தெரியவில்லை என்றும், எனவே அவர்கள் கூறுவதை கண்டுகொள்ளாமல் பணிகளை தொடர வேண்டும் என பாடலாசிரியர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

vairamuthuதமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பெய்து வருகிறது. சென்னை உட்பட தமிழநாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வந்ததையடுத்து கனமழை காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுவருவத்தோடு வெள்ள நிவாரண பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைதொடர்ந்து  5000 மருத்துவ முகாம்,1500 வாகனங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருவதோடு தொடர்ந்து நிவாரண பணிகள் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை சாமியார் தோட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெற்றித் தமிழல் பேரவை சார்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் வழங்கினர்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய கவிஞர் வைரமுத்து கூறியதாவது:  தன்னுடைய உழைப்பால், செயலால் மழை வெள்ள பாதிப்பை மு.க.ஸ்டாலின் சிறப்பாக கையாண்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர் என்றும் எனவே மக்களும், ஊடகங்களும் கூறும் சிறு குறைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனித்து சரி செய்வார் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

மேலும் வெள்ள நிவாரணப் பணிகளில் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுவது போல மக்கள் நினைப்பதாக நான் நினைக்கவில்லை என்றும், சில குறைகள் சொன்னால் தான் நிறைகள் கண்ணுக்கு தெரியும் என்று அவர்கள் கூறியிருக்கலாம், எனவே அவற்றை கண்டுகொள்ளாமல் பணிகளை தொடர வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.