கின்னஸ் சாதனை படைத்த யோகா மாஸ்டர் ஒருவர், தன்னிடம் பயிற்சிக்கு வந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் 45 வயதான யோகராஜ், கடந்த 2015 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் தொடர்ந்து 40 மணி நேரம் யோகா பயிற்சி செய்து புதிய
கின்னஸ் சாதனை படைத்தார். 

யோகா மாஸ்டர் யோகராஜின் கின்னஸ் சாதனையை பார்த்து வியந்த நமது பிரதமர் மோடி, அவர் நிகழ்த்திய சாதனைக்காகத் தனது டிவிட்டரில் யோகராஜ்க்கு பாராட்டு கூறியிருந்தார். இதனையடுத்து, பாஜகவைச் சேர்ந்த பலரும் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

இந்த சூழலில் தான், சென்னையை சேர்ந்த 21 வயதான மருத்துவத் துறையில் பணியாற்றி வரும் இளம் பெண் ஒருவர், கடந்த 6 மாதங்களாக யோகராஜிடம் யோகா பயின்று வந்திருக்கிறார். 

அப்போது, “பார்ட்னர் யோகா” என்கிற பெயரில், யோகா மாஸ்டர் யோகராஜ் அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்புகளைத் தொட்டு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, 45 வயதான யோகராஜ், அந்த 21 வயதான இளம் பெண்ணை காதலிப்பதாகவும் கூறி, பல ஆசை வார்த்தைகள் கூறி பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், “எனக்கு பிறந்த நாள்” என்று கூறி, அந்த 21 வயது இளம் பெண்ணை அவர் தனது வீட்டுக்கு அழைத்திருக்கிறார். அதன் படி, யோகா மாஸ்டரின் வீட்டிற்கு சென்ற அந்த இளம் பெண்ணுக்கு அவர் குடிக்க குளிர்பானம் கொடுத்திருக்கிறார். 

அதனை குடித்த அடுத்த சிறிது நேரத்தில் அந்த இளம் பெண் மயங்கிவிடவே, அந்த இளம் பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். 

குறிப்பாக, இளம் பெண்ணை பலாத்காரம் செய்ததை, அவர் தனது செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டு, அந்த இளம் பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்திருக்கிறார்.

இதனால், இன்னும் பயந்து பான அந்த இளம் பெண், யோ மாஸ்டர் யோகராஜ் மீது மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் கடந்த 6 மாதங்களாக யோகராஜிடம் யோகா பயின்று வந்தேன் என்றும், அப்போது 'பார்ட்னர் யோகா' என்ற பெயரில், மாஸ்டர் யோகராஜ் எனது அந்தரங்க உறுப்புகளைத் தொட்டு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்றும், அதன் பிறகு என்னை காதலிப்பதாகவும் கூறி, என்னிடம் பல ஆசை வார்த்தைகள் கூறி பழகி வந்தார்” என்றும், குறிப்பிட்டு உள்ளார். 

என்னைத் திட்டமிட்டே வீட்டிற்கு அழைத்த அவர் குளிர்பானம் கொடுத்து என்னை மயங்க வைத்து, பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டு, என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறார்” என்றும், பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டி உள்ளார்.

முக்கியமாக, “அந்த யோகா மாஸ்டர், என்னிடம் மட்டுமல்லாது பல பெண்களிடம் இது போன்று தவறாக நடந்து கொண்டிருக்கிறார்” என்றும், அது தொடர்பான ஆதரங்களாக சில ஆடியோக்கள் மற்றும் வீடியோக்களையும் போலீசாரிடம் அவர் அளித்து உள்ளார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், யோகராஜ் மாஸ்டரை அழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதைத் தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.