பண்ருட்டி அருகே மாமியார் மீது சபலப்பட்ட மருமகன், வீடு புகுந்து பலவந்தமாக மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, போலீசுக்கு பயந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பண்ருட்டி அடுத்து உள்ள ஒதியடிக்குப்பத்தை சேர்ந்த 39 வயதான ஜானகி ராமன், புதுச்சேரியில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து, ஜானகி ராமனுக்கு 2 மகன்கள் பிறந்தனர். இப்படி, மகிழ்ச்சியாகத் தான் தனது குடும்பத்துடன் ஜானகி ராமன் வாழ்ந்து வந்தார். 

அத்துடன், கணவரை இழந்த ஜானகிராமனின் மாமியார், அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தனது மாமியார் மீது ஜானகிராமனுக்கு மோகம் ஏற்பட்டு உள்ளது. தன் மாமியாரைப் பார்த்து அவர் சபலப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், நேற்றைய தினம் இயற்கை உபாதைக்காக ஜானகிராமனின் மாமியார், வீட்டின் கதவை பூட்டாமலே அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்று உள்ளார். அப்போது, மாமியார் வீட்டிற்குள் அத்துமீறி ரகசியமாக நுழைந்த மருமகன் ஜானகிராமன், அந்த வீட்டுக்குள் நைசாக நுழைந்து அங்குள்ள ஒரு அறையில் பதுங்கிக் கொண்டார்.

இதனையடுத்து, இயற்கை உபாதை கழித்து விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்த அவரது மாமியார், கதவைப் பூட்டி விட்டு வழக்கம் போல் உறங்கச் சென்று உள்ளார்.  அப்போது, அங்கு பதுங்கி இருந்த ஜானகிராமன், தனது மாமியார் மீது பாய்ந்து விழுந்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவரது மாமியார், “தன்னை காப்பாற்றச் சொல்லி” சத்தம் போட்டுக் கூச்சலிட்டுள்ளார். இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நிமிடம் அப்படியே நின்ற ஜானகிராமன், தனது மாமியாரை அடித்தும், தாக்கியும் அவரது வாயை மூடியும் அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பாலியல் பலாத்காரம் செய்த பிறகு, அங்கிருந்து அவர் தப்பி ஓடி உள்ளார். இதனையடுத்து, அவரது மாமியார் உதவி கேட்டு மீண்டும் சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது, ஆடைகள் எல்லாம் முற்றிலும் கிளிக்கப்பட்ட நிலையில், அவர் படுகாயங்களுடன் அந்த வீட்டில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக படுகாயங்களுடன் இருந்த ஜானகிராமனின் மாமியாரை, மீட்டு கடலூர் அரசு 

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, “எனது மருகமனே என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டான்” என்று, அந்த மாமியார் கதறி அழுதுள்ளார்.

இதனையடுத்து, போலீசார் ஜானகிராமனை தேடி வந்னர். இதன் காரணமாக, போலீசார் தன்னை தேடுவதை அறிந்த ஜானகிராமன், “எப்படியும் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள்” என்று, பயந்த நிலையில், அங்குள்ள ஒதியடிக்குப்பம் சாலையோரம் உள்ள ஒரு மரத்தில் அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

அந்த நேரம் பார்த்து, அந்த வழியாகச் சென்றவர்கள், இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்து, ஓடி வந்து தூக்கில் தொங்கிய ஜானகிராமனை மீட்டு சிகிச்சைக்காகக் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, ஜானகிராமனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜானகிராமன் தற்கொலை முயற்சி குறித்தும், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த பார்த்த போலீசார், மாமியார் பாலியல் பலாத்காரம் செய்த ஜானகிராமன் தான், கைதுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.