போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், சக பெண் போலீஸ்க்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்து உள்ள கீரனூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வீரகாந்தி என்பவர், பணியாற்றி வந்தார்.

இப்படியான சூழ்நிலையில் தான், கடந்த சில நாள்களுக்கு முன்பு அதே காவல் நிலையத்தில் தன்னிடம் பணி புரியும் பெண் காவலருக்கு வீரகாந்தி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட அந்த பெண் காவலர், தனது உயர் அதிகாரியிடம் சென்று புகார் அளித்ததாகவும் கூறப்பட்டது.

அத்துடன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், சக பெண் போலீஸ்க்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக எழுந்துள்ள புகார் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதனையடுத்து, இது தொடர்பான புகாரை பெற்றுக்கொண்ட திண்டுக்கல் மாவட்ட ஏ.டி.எஸ்.பி லாவண்யா தலைமையில், இந்த புகார் அளித்த பெண் காவலர், கீரனூர் காவல் துறையினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

மேலும், போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரகாந்தியிடமும் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படகிறது.

இந்த விசாரணைக்கு பிறகு, போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரகாந்தியை ஆயுதப்படைக்கு மாற்றி, போலீஸ் டிஐஜி விஜயகுமாரி அதிரடியாக உத்தரவிட்டார்.

இதனையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரகாந்தியை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு உள்ளார். 

அதே நேரத்தில், பழனி மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரகாந்தி மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதனிடையே, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், சக பெண் போலீஸ்க்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தமிழகம் முழுவதும் உள்ள சக போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.