மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளதால், அதன் கரையோர மக்களுக்கு தற்போது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அதாவது, கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் தொடர் மழை காரணமாக மிக வேகமாக அந்த அணைகள் நிரம்பி வருகின்றன. 

இதனால், அங்குள்ள அணைகளில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரத்து 883 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தான், தமிழக - கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது உள்ளது. 

மேலும், கடந்த 3 ஆம் தேதியில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர்வரத்து அங்கு கணக்கீடப்பட்டது. இந்த நீர்வரத்தானது நேற்று முன் தினம் வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்து காணப்பட்டது. 

இதனால், மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே அடியாக மிக வேகமாக உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் தான், தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 5 மணி நிலவரப்படி, 119 அடியை எட்டி உள்ளது. 

இதனயடுத்து, அணையில் இருந்து இன்று காலை 5 மணி அளவில் முதற்கட்டமாக 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 

இதனால், அணையில் இருந்து திறந்து விடும் தண்ணீரின் அளவு தற்போது வினாடிக்கு 20,000 கன அடியாக உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக, காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 

மிக முக்கியமாக, காவிரி கரையோர பகுதிகளுக்கு தற்போது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

தற்போது 2 ஆம் கட்டமாக அந்த அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள மக்கள் பலரும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று உள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை எட்டியதை அடுத்து, அங்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 

மேலும், நீர் மின் நிலையங்கள் வழியாக உபரி நீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவற்றுடன், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து, அந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு இன்னும் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

அதன்படியே, காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.