தமிழகத்தில் கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை தமிழக அரசு தற்போது வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் 2 வது அலையின் வேகம் சற்று குறைந்து வருகிறது. இதனால், தமிழ் நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும், நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. 

இதன் காரணமாக, பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு கடந்த வாரம் வெளியிட்டு இருந்தது.

அதே போல், கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் கல்லூரிகள், மூடப்பட்டன. 

இந்த நிலையில், தற்போது கொரோனாவின் 2 வது அலை சற்று குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அறிவித்து உள்ளது. 

அதன் படி, தற்போது கல்லூரிகள் செயல்படுவதற்கான வழிகாட்டும் நெறிமுறைகள் தமிழக அரசு தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. 
அதன்படி., 

- அனைத்துக் கல்லூரிகளும்‌ தங்கள்‌ கல்லூரிகளில்‌ உள்ள அனைத்து வகுப்பறைகள்‌, நாற்காலிகள்‌, விளையாட்டுக் கருவிகள்‌, ஆய்வகங்கள்‌ போன்றவற்றைக் கிருமிநாசினி கொண்டு முற்றிலுமாக சுத்தம்‌ செய்ய வேண்டும்‌ என்று, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

- கட்டாயமாக அனைத்து மாணவர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியரல்லாப்‌ பணியாளர்கள்‌ இரு தவணை தடுப்பூசிகளையும்‌ போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டு உள்ளது‌. 

- தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பணியாளர்கள்‌ ஆசிரியர்கள்‌ மற்றும்‌ அலுவலக பணியாளர்கள்‌ கட்டாய விடுப்பில்‌ அனுப்பப்படுவார்கள் என்றும், குறிப்பிடப்பட்டு உள்ளது.

- தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் மாணவர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ அலுவலக பணியாளர்கள்‌ விவரங்களைத் தயார்‌ நிலையில்‌ வைத்திருக்குமாறும்‌, அரசு கேட்கும் போது வழங்க வேண்டும் என்றும், அதிகாரிகளுக்கு கூறப்பட்டு உள்ளது. 

- கொரோனா சிகிச்சை மையமாக உள்ள கல்லூரிகளில் இணைய வழி வகுப்புகளையே தொடர விரைவில்‌ முடிவு செய்யப்படும்‌ என்றும். தெரிவிக்கப்பட்டு உள்ளத.

- பெற்றோர்‌ ஆசிரியர்‌ கழகக் கூட்டம்‌ கூட்டி பெற்றோர்களின்‌ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டு உள்ளது‌.

- சுகாதாரத்‌துறை அலுவலர்களைத் தொடர்புகொண்டு, தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்குக் கல்லூரியிலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது‌.

- கொரோனா நோய்த்‌ தொற்று அறிகுறி உள்ள மாணவர்களைக் கண்டறிந்தால்‌, உடன்‌ அவருடன்‌ தொடர்பிலிருந்த அனைவருக்கும் ஆர்டி- பிசிஆர் சோதனை எடுக்க வேண்டும் என்றும், ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது‌.

மாற்றுத்திறனாளி மாணவர்கள்‌ கல்லூரிக்கு வருகை தர வேண்டிய அவசியமில்லை.

- கல்லூரி வளாகத்தினுள்‌ பயன்படாத பிளாஸ்டிக்‌ கப், தேநீர்‌ கப், டயர்கள்‌, விஷ ஐந்துக்கள்‌ தஞ்சமடையும்‌ இடங்களை உடனே‌ அப்புறப்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டு உள்ளது‌.

- நுழைவு வாயில்‌ மற்றும்‌ வெளியேறும்‌ வழிகளில்‌ கண்காணிப்புக் குழு அமைத்து, வழி காட்டு நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்‌ என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- சுத்தமான குடிநீர்‌ வசதியை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும்‌ என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

- கல்லூரி தொடங்குவதற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே, கல்லூரி வளாகத்தினைச் சுத்தம்‌ செய்திட வேண்டும் என்றும், தமிழக அரசு, புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியீட்டு உள்ளது.