கோவை அருகே உள்ள ஒரு கிராமப்புற மலைப் பகுதியில் சிலர் பன்றி வேட்டைக்குச் சென்று உள்ளனர். அப்போது, அவர்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி திடீரென வெடித்ததில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து காவல்துறை கூறும் போது, “கோவை அருகே உள்ள தீத்தி பாளையத்தில் உள்ள மாதேஷ், கவுண்டர் வீதியைச் சேர்ந்த அய்யாச்சாமி ஆகியோர் அங்குள்ள வனப்பகுதி அருகில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் வசித்து வருவாபக” குறிப்பிட்டனர். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், “நேற்று இரவு நண்பர்கள் பாபு, ஆனந்த், ரங்கநாதன், ராமசாமி ஆகியோருடன் கூட்டாகச் சேர்ந்து சட்ட விரோதமாக உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை தங்கள் வேட்டைக்காக எடுத்துக்கொண்டு அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்றுள்ளதாகவும்” போலீசார் குறிப்பிட்டனர்.

அத்துடன், “அந்த வனப் பகுதியில் காட்டுப் பன்றியை வேட்டையாடச் சென்றதாகவும் கூறப்படுகிறது. 

“அப்பொழுது, வேட்டைக்காக தங்களுடன் வந்த நண்பர்களில் ஒருவர் கையில் வைத்திருந்த அந்த நாட்டு துப்பாக்கி திடீரென்று காட்டில் உள்ள மரக்கிளையில் உராய்ந்து வெடித்துள்ளது” என்று, கூறப்படுகிறது. 

அந்த நேரத்தில், “வேட்டைக்குக் கூட வந்த நண்பரான அய்யாசாமி மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இந்த தகவலறிந்த அந்தப் பகுதியில் வசிக்கும் மலை கிராம மக்கள், வனத்துறை மற்றும் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர். 

தகவலைப் பெற்று சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அய்யாச்சாமி உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், நண்பர்கள் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்ட விரோதமாக உரிமம் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தது குறித்தும் தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது போன்று சட்ட விரோதமாகச் செயல்படும் கும்பல் நாடு முழுவதும் உள்ள வனப்பகுதியில் இன்றும் ராஜாவாகத்தான் உலா வருகின்றனர். 

இதற்குக் காரணம் எவ்வளவு கடுமையான சட்டங்கள் இருந்தாலும், அதைப் பாதுகாக்க வனத்துறையில் போதிய காவலர்கள் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை என்றும் கூறப்படுகிறது. இனியாவது, வனங்களைக் காத்து நம் வளங்களைப் பெருக்கி சந்ததிகளை வித்திடுவோம் என்று உறுதி ஏற்போம்.