ஒமிக்ரான் வைரஸ் கவலைக்குரியதே என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

omicron

ஓமைக்ரான் என்ற புதிய வகை உருமாற்றமடைந்த கொரோனா இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். புதிய வைரசால் விழிப்புடன் இருக்குமாறு தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று, உலக மக்களையே கடந்த 2 வருடங்களாக கட்டுக்குள் வைத்து வருகிறது. பாகுபாடுன்றி உலகையே புரட்டி போட்ட இந்த கொரோனா வைரசை மருத்துவத்துறையினர் அதிவிரைவில் கொரோனா தடுப்பூசியை கண்டுப்பிடித்து போராடி கட்டுக்குள் கொண்டு வந்தாலும், அவ்வப்போது உருமாறி வீரியத்துடன் மக்களை தாக்கி வருகிறது.

புதிய வகை உருமாறிய மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் பரவி வருகிறது. உருமாற்றம் அடைந்த புதிய 'ஒமிக்ரான்' (B.1.1.529) வகை கொரோனா உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக தென்ஆப்பிரிக்கா, பிரேசில், சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், வங்காளதேசம், இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜிம்பாப்வே உள்ளிட்ட 12 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

அதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கி இருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் பரவலால் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு புரூணை, மியான்மர், கம்போடியா, திமோர், இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் உலக சுகாதர அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்  இதுபற்றி தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறும்போது, பண்டிகைகள், பிற கொண்டாட்டங்களில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையும் அவசியம். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். எந்த வகையிலும் பாதுகாப்பு அம்சங்களை விட்டு விடக்கூடாது. நமது பிராந்தியத்தில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது. உலகின் பிற நாடுகளில் இந்த வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. புதிய வகை வைரஸ் கவலைக்குரியதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தென்னப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் போஸ்த்வானா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதனால் ஆப்பிரிக்க நாடுகளுடனான விமான சேவையை இஸ்ரேல், பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகள் ரத்து செய்துள்ளன.  அதேபோல இந்தியா அங்கிருந்து வரும் பயணிகளை தீவிரமாகப் பரிசோதித்து அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸ் கவலைக்குரியதே என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜோ பைடன் கூறியதாவது:  ஒமிக்ரான் கொரோனா வைரஸ் உலக அளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், பல்வேறு நாடுகள் தங்கள் எல்லைகளை மூடி வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக நேற்று வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ஜோ பைடன், ஒமிக்ரான் வைரஸ் திரிபு கவலைக்குரியதே அதேவேளை இது மக்கள் பீதியடைய காரணமல்ல இணைப்பு தெரிவித்தார். 

மேலும் முழு முடக்கம், ஊரடங்கு போன்றவை இல்லாமல் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகரித்தல், பூஸ்டர் டோஸ், பரிசோதனை உள்ளிட்டவற்றவை அதிகரிப்பதன் மூலம் குளிர்காலத்தில் நாம் எவ்வாறு இந்த வைரசுக்கு எதிராக போராட உள்ளோம் என்பது குறித்து நான் விரிவான திட்டங்களை முன்வைக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.