ஞானப்பால் குடிக்க ஆசைப்படுபவர்கள் கைலாசா வரலாம் என்று நித்தியானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.

நித்தியானந்தாவுக்கு எதிராக 'புளு கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர் தேடப்பட்டு வருகிறார்.

nithyananda kailasa island new statement

இதனிடையே, நித்தியானந்தா அவ்வப்போது தனது பக்தர்களுக்காக ஆன்லைன் மூலம் சத்சங்கம் நிகழ்ச்சியில் சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார்.

அதன்படி, தற்போது நித்தியானந்தா பேசியுள்ள சத்சங்கம் நிகழ்ச்சியில், டி.வி. சீரியல் பார்க்கும் பெண்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

அதாவது, “தீய சக்திகள் நமது வாழ்க்கை மீது நடத்தும் ராட்சத தாக்குதல்கள் தான் டிவி சீரியல்கள்” என்று கடுமையாகத் தாக்கி உள்ளார். “டிவி சீரியல் பாத்துட்டு செத்துபோயிடுவீங்க, டிவி சீரியல் பாத்துட்டு இருக்கும்போதே, பலருக்கு பியூஸ் போயுடுது” என்று நகைச்சுவையோடு பேசியுள்ளார்.

nithyananda kailasa island new statement

“வீட்டில் உள்ள பெண்கள், தினமும் டிவி சீரியல் பார்த்துவிட்டு நகை, புடவை உள்ளிட்ட பல ஆடம்பர பொருட்களைக் கேட்டு நச்சரிப்பதாகவும், இதனால் கணவன்மார்கள் தினமும் புலம்பிக் கொண்டிருப்பதாகவும்” நகைச்சுவையோடு சுட்டிக்காட்டி உள்ளார்.

அத்துடன், “ 'மனிதனுக்கு உயிர் மூல லிங்கம் என்ற சக்தி' கிடைக்க வேண்டும் என்றால், உடனடியாக டிவி சீரியல்கள் பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

குறிப்பாக, “இறைவன் தந்த அருளால் 'கைலாசா நாட்டை' உருவாக்கிவிட்டதாகவும், 'ஞானப்பால்' குடிக்க ஆசைப்படுபவர்கள் கைலாசா வரலாம்” நித்தியானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.