கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச உணவு டெலிவரி செய்யும் சேவையை, புதிய டெக்னாலஜி கொண்டு, புதிய செயலியை கண்டுப்பிடித்து செயல்படுத்தி வருகிறார்.

கொரோனா முதலாவது மற்றும் இரண்டாவது அலையால் வீழ்ந்த தொழில் சாலைகளையும், இழுத்து மூடப்பட்ட வணிக நிறுவனங்களைப் பற்றியும் தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். 

ஆனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர், அதிலிருந்து மீளும் போதே ஒரு புதுவித பிசினஸ் ஐடியாவை உருவாக்கி, இப்போது அதை வெற்றிகரமானதாகவும் மாற்றி உள்ளார் என்றால், அதனை நம்ப முடிகிறதா? அட ஆமாங்க, சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த சுந்தர் என்பவரும், அவரது 13 வயது மகளான சஹானாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று தற்போது பூரணமாகக் குணமடைந்தனர்.

இதனையடுத்து, தங்களைப் போன்ற கொரோனா நோயாளிகளுக்காக பாடுபடும் முன்களப் பணியாளர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த சுந்தர், "Nighbro"  எனும் செயலி ஒன்றை புதிதாக வடிவமைத்தார். முன்களப்  பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவர்களுக்கும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இலவசமாக உணவை டெலிவரி செய்யும் சேவையைத் தொடங்கினார்.

சுந்தரின் இந்த ஐடியாவிற்கு உயிர் கொடுக்க பல தன்னார்வலர்கள் முன் வந்தனர். செவிலியர்கள், மருத்துவர்கள், காவலர்கள், துப்புரவு தொழிலாளர்கள், கொரோனா நோயாளிகள் என 100 க்கும் மேற்பட்டோருக்கு இந்த செயலி மூலமாக இலவசமாக உணவு வழங்கி உள்ளார். 

அதே சமயத்தில், மற்றொருபுறம் கொரோனா நோய் தொற்றுக்கு அஞ்சி பெரும்பாலான மக்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதையும் கவனித்து வந்த சுந்தருக்கு, ஒரு சூப்பரான ஒரு ஐடியா தோன்றியிருக்கிறது. 

அதாவது, வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் ரீட்டைல் கடைக்காரர்களுக்கும், கஸ்டமருக்கும் இடையே கனெக்‌ஷன் ஏற்படுத்தும் வகையில் "Nighbro" ஆப்பை ஏன் மாற்றி அமைக்க கூடாது என யோசித்தார். அதே நேரத்தில்,  கஷ்டமருக்கும் கிடைக்காமல், விற்பனையாளருக்கும் இல்லாமல் பிரபல கார்ப்ரேட் நிறுவனங்கள் பெரும் லாபத்தை சுருட்டிக் கொள்வது போல் இல்லாமல், குறைந்த கமிஷனுக்கு விற்பனையாளரும், வாடிக்கையாளரும் லாபம் பெற வேண்டும் என்பதை பிரதான கொள்கையாக மாற்றியிருக்கிறார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட சுந்தரின் இந்த ‘சின்னக் கல்லு, பெத்த லாபம்’ ஐடியா பற்றி கூறும் போது, “நீங்கள் பிரபல கார்ப்ரேட் ஆப்களை எடுத்துக்கொண்டீர்கள் என்றால், அதில் நீங்கள் வெளியே வாங்கும் பொருட்களை விட கூடுதலாகவே விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதற்கு காரணம், அந்த கார்ப்ரேட் நிறுவனத்திற்கான கமிஷன் மற்றும் வாடிக்கையாளர்களை கவருவதற்காக விற்பனையாளர்கள் கொடுக்கும் ஆபர்கள் என அனைத்து சுமைகளும், விலையில் கூட்டப்பட்டிருக்கும். 

அதை நிச்சயமாக Nighbro குறைக்கிறது. உங்களுக்கு அருகிலேயே உள்ள கடைகள் மூலமாக பொருட்கள் கிடைக்கும் என்பதால், கட்டாயம் அதற்கான சர்வீஸ் கட்டணங்களும் குறைவாக தான் இருக்கும். இதனால், வியாபாரிகள் தங்களுடைய பொருட்களின் விலையை தேவையில்லாமல் உங்களுடைய பில்லில் ஏற்ற வேண்டி இருக்காது” என்கிறார்.

இத்தோடு மட்டும் Nighbro ஆப் பயன்பாடுகள் நின்றுவிடவில்லை. பிரபல கார்ப்ரேட் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கே சவால் விடும் வகையில் Nighbro ஆப்பில், Machine learning டெக்னாலஜியைப் பயன்படுத்தி, வாய்ஸ் மூலமாக கூட வாடிக்கையாளர்கள் பொருட்களை தேடும் வசதியை அவர் ஏற்படுத்தியுள்ளார். 

“அச்சச்சோ, அந்த பொருளோட பிராண்ட் பெயருக்கு எனக்கு சரியாக ஸ்பெல்லிங் தெரியாதே?” என, இனி யாரும் தயங்க வேண்டாம். வாடிக்கையாளர் தனக்கு ஒரு மளிகை பொருள் அவசரமாக 20 நிமிடத்தில் வந்து சேர வேண்டும் என வாய்ஸ் பதிவு செய்தால் மட்டுமே போதும், 20 நிமிடத்திற்குள் அந்த பொருளை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்க எந்த கடைக்காரர் தயாராக இருக்கிறார்? எங்கு இருக்கிறார்? போன்ற அனைத்து தகவல்களையும் Nighbro உங்களுக்கு கொடுத்துவிடும். 

அதே போல், Local Search engine போல வாடிக்கையாளர்களுக்கு எந்த கடையில், என்னென்ன பொருட்கள் கிடைக்கும் என்பதையும் Nighbro ஆப் மூலமாகவே நீங்கள் தேடிக்கொள்ள முடியும் என்பது எல்லாம் இந்த செயலின் கூடுதல் சிறப்பம்சங்களாக உள்ளன.

வாழ்வில் நாம் சந்திக்கும் சில நபர்கள் மறக்க முடியாதவர்களாக, முக்கியமானவர்களாக மாறி விடுவார்கள். அத்தகைய ஒரு செயலியாக நிச்சயம்
Nighbro இருக்கும். ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள். உங்களின் உற்ற நண்பனாக Nighbro இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை” என்று, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த சுந்தர், தன்னைப் போல் வேறு யாரும்  பாதிக்கப்படக்கூடாது என்று கூறுகிறார்.