ஆபாசப் படம் பார்க்கும் சிறுவனின் வீட்டிற்கு, அந்த படத்தில் நடித்த நடிகர் - நடிகை இருவரும் ஆடையின்றி வருவது போல், அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. 

உலகம் முழுவதும் ஆபாசப் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. அதிலும் குறிப்பாக, ஆசியாவில் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் தான் அதிகம் என்றும் புள்ளி பிவரங்கள் கூறுகின்றன.

குறிப்பாக, இந்த ஊரடங்கு காலத்தில் ஆபாசப் படங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அதிலும் குறிப்பாக சென்னையில் அதிகமானோர் ஆபாசப்படம் பார்ப்பகதாவும் குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. முக்கியமாக, இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான ஆபாசப் படங்களைப் பலர் தேடி தேடி பார்ப்பதாகவும் ஏற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதேபோல், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில், உலகம் முழுவதும் முககவசத்திற்கு இணையாக, ஆணுறைகள் விற்பனை சாதனை படைத்து வருவதாகவும், செய்திகள் வெளியானது. அத்துடன், அமெரிக்க போன்ற வெளி நாடுகளில் சுய இன்ப பாலின பொருட்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, அதிக அளவில் விற்றுத் தீர்ந்துள்ளதாகவும் கடந்த மார்ச் மாத இறுதியிலேயே கூறப்பட்டன.

இதனிடையே, நியூசிலாந்து நாட்டில் ஆபாசப் படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக சிறுவர்கள் உட்பட பலரும் தங்களது சிறு வயதிலேயே ஆபாசப் படங்கள் பார்ப்பதாகவும் கூறப்பட்டது.

இது குறித்து ஆலோசித்த நியூசிலாந்து அரசு, ஆபாசப் படத்தைப் பார்ப்பதைக் குறைக்கும் நோக்கிலும், ஆபாசப் படத்தைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு அறிவுரை கூறும் வகையிலும், ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது.

அதன்படி, “ஆபாச படத்தில் தோன்றும் காட்சிகளுக்கும், வீட்டில் நடைபெறும் உண்மையான தாம்பத்திய செக்ஸ் உறவுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்தும் வகையில், புதிய முயற்சியாக இந்த வீடியோ படமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், “இளைய தலைமுறையினர் தாம்பத்தியம் மற்றும் செக்ஸை சரியாகப் புரிந்து கொள்ள வழி வகுப்பதற்கும் இந்த விழிப்புணர்வு திரைப்படம்” பொருத்தமாக இருக்கும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது. 

அந்த வீடியோவில், “ஆபாசப் நடிகர் - நடிகை இருவரும், ஆடையின்றி ஒரு வீட்டிற்குச் சென்று, அந்த வீட்டுக் கதவைத் தட்டுகின்றனர். அந்த வீட்டில் உள்ள, ஒரு வயது முதிர்ந்த பெண், குளித்த தலையுடன் தலையில் டவல் கட்டிய படியே கதவைத் திறக்கிறார். அப்போத, ஆபாசப் பட நடிகர் - நடிகை இருவரும், அந்த வீட்டின் முன்பு நிர்வாணமாக நிற்கின்றனர். 

இதனைப் பார்த்து, அந்த வீட்டுப் பெண்மணி கடும் அதிர்ச்சி அடைகிறார். அந்த வியப்புடனே.. “என்ன விஷயம்?” என்று கேள்வி கேட்கிறார். 

அதற்கு, “உங்கள் வீட்டில் உள்ள சிறுவன் எங்களுடைய ஆபாசப் படத்தைத் தொடர்ந்து பார்த்து வருகிறார். அவரை பார்க்க வந்துள்ளோம்” என்றார்கள். 

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்மணி, உடனே வீட்டிற்குள் இருக்கும் தனது மகனைப் பெயரைச் சொல்லி அழைக்கிறார். அம்மா கூப்பிடுவதைக் கேட்ட, அந்த சிறுவனும், கையில் லேப் டாப்புடன் வந்து, அம்மாவை பார்த்துவிட்டு வீட்டு வாசலை எட்டிப் பார்க்கிறான். 

அங்கு, தான் சற்று முன்பாக பார்த்த ஆபாசப் படத்தில் வரும் நடிகர் - நடிகை இருவரும், தன் கண் முன்பு வீட்டிற்கே வந்து; அதுவும், நிர்வாணமாக இருப்பதைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைகிறான்.

அதன் பிறகு, அந்த நடிகர் - நடிகை இருவரும், “ஆபாசப் படத்தில் வரும் காட்சிக்கும், உண்மையான உறவு முறைக்கும் இடையே உள்ள வித்தியாசம் இருக்கிறது என்றும், அதை உனக்குப் புரிய வைக்கவே உன் வீட்டிற்கு நேரில் வந்தோம்” என்றும் கூறுகின்றனர்.

அப்போது, இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்மணி, தன்னுடைய மகனையும், அந்த ஆபாசப் பட நடிகர் - நடிகை இருவரையும் மாறி மாறி பார்ப்பது போல், அந்த விடியோ காட்சிப்படுத்தப்பட்டு, அறிவுரை கூறும் வகையில் முடிகிறது.

இந்த திரைப்படத்துக்கு, நியூசிலாந்து நாட்டின் பொது மக்கள் மத்தியில் மிகப் பெரிய நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த குறும் படத்தை வெளியான சில நாட்களிலேயே சுமார் 6 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 

இதனிடையே, நியூசிலாந்து நாட்டில் ஆபாசப் படம் பார்க்கும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அந்நாட்டு அரசு, அறிவுரை கூறும் வகையில், ஒரு செய்தி திரைப்படத்தை எடுத்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.