காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அக்காவை, காதலனுடன் இணைந்து 17 வயது தங்கை கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் கொசவம்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான பழனிசாமிக்கு, ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இதில், 19 வயதான மூத்த மகள் மோனிஷா, நாமக்கல்லில் உள்ள கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். இவரது 2 வது மகள், 17 வயதான சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். 

Namakkal family murdered for love

இதனிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோனிஷா, அப்பகுதியைச் சேர்ந்த 19 வயதான ராகுல் என்பவரை காதலித்து வந்துள்ளார். நாளடைவில், ராகுலின் நடவடிக்கை தவறாக இருந்ததால், அவரிடமிருந்து மோனிஷா காதலைத் துண்டித்துள்ளார்.

இதனையடுத்து, மோனிஷாவின் தங்கை 17 வயது சிறுமியை, தன் காதல் வலையில் வீழ்த்திய ராகுல், அந்த சிறுமியிடம் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதில், அந்த சிறுமி கருவுற்ற நிலையில், இந்த தகவல் மோனிஷாவுக்கு தெரியவந்த நிலையில், அவர் தன் தங்கையின் நடவடிக்கை குறித்து தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, வீட்டில் உள்ள அனைவரும் 17 வயது சிறுமிக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

இதனால் கோபமடைந்த அந்த சிறுமி, தன் காதலனுடன் சேர்ந்து அக்கா மோனிஷாவை கொலை செய்யத் திட்டமிட்டார்.
 
அதன்படி, கடந்த 4 ஆம் தேதி மோனிஷாவின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், வீட்டில் மோனிஷா மற்றும் அவரது 17 வயது தங்கை மட்டும் தனியாக இருந்துள்ளனர். அப்போது, மோனிஷா தூங்கிக்கொண்டிருந்த நிலையில், ராகுல் அவர்கள் வீட்டிற்கு வந்துள்ளார். 

Namakkal family murdered for love

இதனையடுத்து, ராகுல் மோனிஷாவை பிடித்துக்கொண்ட நிலையில், அவரது தங்கை, அக்காவின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி உள்ளார். இதில், மோனிஷாவுக்கு மூக்கிலிருந்து ரத்தம் வந்து, அவர் மயங்கி உள்ளார். இதனால் பயந்துபோன ராகுல் அங்கிருந்து ஓடியுள்ளார். பின்னர், அங்கிருந்த கத்தியை எடுத்துக்கொண்டு, மோனிஷாவின் கையிலும், தன்னுடைய கையிலும் மாறி மாறி அறுத்துக்கொண்டு, சத்தம் போட்டு அலறி துடித்துள்ளார்.

இதனையடுத்து அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து, அக்கா - தங்கை இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மோனிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். 

மேலும், இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், என்ன நடந்தது என்று அந்த சிறுமியிடம் விசாரித்துள்ளனர். விசாரணையில், “எனக்கும் என் அக்காவுக்கும் சண்டை வந்ததாகவும், இதில் இருவரும் மாறி மாறி தங்களது கையை தாங்களே அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும்” கூறி உள்ளார்.  

இதனால், இது தற்கொலையாக இருக்கும் என்று போலீசார் நினைத்தனர். ஆனால். மோனிஷாவின் தாயார், ராகுல் வீட்டின் மாடியிலிருந்து அப்போது ஏறி குதித்து ஓடியதாக போலீசாரிடம் கூறி உள்ளார்.

இதனையடுத்து, ராகுலை பிடித்து போலீசார் விசாரித்த நிலையில், அனைத்து உண்மைகளும் தெரியவந்தது. இதனையடுத்து, ராகலை கைது செய்த போலீசார், மோனிஷாவின் தங்கையைக் கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அனுமதித்தனர்.

இதனிடையே, நாமக்கல்லில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அக்காவை, காதலனுடன் இணைந்து 17 வயது தங்கையே கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.