நாமக்கல் அருகே சுடுகாடு அமைந்துள்ள பகுதியில் ஆடைகள் இன்றி, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் என்னதான் வீடுகளில் முடங்கிப் போய் இருந்தாலும், சில காம வெறியர்கள் எதைப் பற்றியும் துளிகூட கவலைப்படாமல், கொரோனா அச்சம் பற்றியும் கவலை கொள்ளாமல், ஐம்புலன்களையும் அடக்கி ஆளாமல், காமத் தீயில் பற்றி எரிந்துகொண்டு இருக்கிறார்கள் என்றுதான், இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது சொல்லத் தோன்றுகிறது. 

நாமக்கல் மாவட்டம் பெரிய மணலி ஜேடர்பாளையம் பகுதியில் அமைந்துள்ள சுடுகாடு பகுதியில், பெண் ஒருவர், உடம்பில் துளிகூட ஆடைகள் இன்றி, நிர்வாண நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதனை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து, பொது மக்கள் சிலர், அங்குள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு இது பற்றிக் கூறி உள்ளனர். இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், அந்த பெண்ணின் சடலத்தைப் பார்த்துள்ளனர்.

அப்போது. அந்த பெண்ணின் உடலானது, துளிகூட உடம்பில் ஆடைகள் இன்றி கிடந்துள்ளது. அத்துடன், அந்த பெண்ணின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், தலையில் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளது. உடம்பின் பல பகுதிகளிலும் காயங்கள் இருந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, அந்த பெண்ணின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், உயிரிழந்த பெண் அங்குள்ள பெரிய மணலியை அடுத்துள்ள குமரவேலி பாளையத்தைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ராஜேந்திரன் என்பவரின் மனைவி 35 வயதான நாகலட்சுமி என்பது தெரிய வந்தது. இந்த உடலை, அவரது குடும்பத்தினர் உறுதி செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, மோப்ப நாய் பவானி வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், அங்குக் கிடந்த சில பொருட்களும் கைப் பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, நாகலட்சுமி உடல் மீட்கப்பட்ட இடத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள், வாகனத்தை நிறுத்தி, அதிலிருந்து நாகலட்சுமி உடலை இழுத்து வந்து, இந்த சுடுகாட்டு பகுதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளது தெரிய வந்தது. அது தொடர்பான தடங்களும் அங்குக் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அந்த பெண் பாலியல் பலாத்கார சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அத்துடன், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகனங்கள் குறித்து போலீசார் தற்போது தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால், கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இதனிடையே, சுடுகாடு அமைந்துள்ள பகுதியில் ஆடைகள் இன்றி, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்,  நாமக்கல் மாவட்டத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.