நாகை மாவட்டத்தில் கள்ளக் காதலர்கள் உல்லாச இன்பத்தில் ஈடுபட்டிருந்த போது இடையூறு செய்த குழந்தையை, கள்ளக் காதலன் எட்டி உதைத்துக் கொன்ற கொடூர சம்பவம் நெஞ்சைப் பதை பதைக்கச் செய்து உள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிளியூர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மனைவி 28 வயதான எழிலரசி தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் மனுஸ்ரீ என்ற ஒரு மகள் இருந்தனர். எழிலரசியின் கணவன் மகேந்திரன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால், கணவனை இழந்து எழிலரசி, தனது 2 பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்தார். 

அப்போது, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநராக பணியாற்றி வரும் 30 வயதான ராமதாஸ் என்பவருடன் எழிலரசிக்கு, தொலைப்பேசி மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறி உள்ளது. இந்த காதல், ராமதாஸ் -
எழிலரசி இடையே கடந்த ஒரு ஆண்டுகளாகத் தொடர்ந்து உள்ளது.

இப்படி கள்ளக் காதலர்கள் இருவரும் உல்லாச இன்பத்தில் ஜாலியாக ஊர் சுற்றித் திரிந்து உள்ளனர். இவர்களது உல்லாச ஊர்வலத்தில், எழிலரசி தன்னுடைய 2 குழந்தைகளையும் தன்னுடனேயே அழைத்துக்கொண்டு சென்று உள்ளார்.

இந்நிலையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வந்த ராமதாசும் - எழிலரசி கள்ளக் காதல் ஜோடி, அங்கு உள்ள விடுதியில் ரூம் போட்டுத் தங்கி உள்ளனர். 

அப்போது குழந்தைகள் இருவரையும் அதே ரூமில் படுக்க வைத்து விட்டு, கள்ளக் காதல் ஜோடிகளான ராமதாசும் - எழிலரசியும் உல்லாச இன்பத்தில் ஈடுபட்டு இருந்தனர். 

அந்த நேரம் பார்த்து, எதிர்பாராத விதமாகத் தூக்கத்திலிருந்து கண் விழித்த 3 வயது குழந்தை மனுஸ்ரீ “அம்மா அம்மா” என்று அழுது இடையூறு செய்து உள்ளது.  

அப்போது, உல்லாச இன்பத்தில் ஈடுபட்டு இருந்த கள்ளக் காதலன் ராமதாஸ், கடும் கோபம் அடைந்துள்ளான். முதலில் குழந்தையைக் கண்டபடி திட்டி விரட்டி விட்டிருக்கிறான். ஆனால், குழந்தையோ அழுதுகொண்டு அம்மாவின் அருகில் வந்து, அம்மாவை அழைத்துக்கொண்டே இருந்து உள்ளது. இதனால், கடும் எரிச்சல் அடைந்த கள்ளக் காதலன் ராமதாஸ், கடும் கோபம் அடைந்து குழந்தையை அப்படியே எட்டி உதைத்து உள்ளான். இதில், சற்று தொலைவில் போய் விழுந்த குழந்தை அப்படியே மயங்கி கீழே விழுந்து உள்ளது. குழந்தைக்குப் பேச்சு மூச்சு இல்லை. அழவும் இல்லை.

இதனால், பயந்துபோன தாய் எழிலரசி, குழந்தையை அருகில் சென்று பார்த்து உள்ளார். குழந்தையின் மூச்சு நின்றுபோனது தெரிய வந்தது. குழந்தை உயிரிழந்ததைக் கண்டு கள்ளக் காதலர்கள் இருவரும் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

இதனால் பதறிப்போன கள்ளக் காதலர்கள் இருவரும், குழந்தை மாடியிலிருந்து தவறி விழுந்து அடிபட்டு விட்டதாகக் கூறி நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு, குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்து விட்டு, பிராதே பரிசோதனைக்குக் குழந்தையின் உடலை அனுப்பி வைத்து உள்ளனர்.

பிராதே பரிசோதனை அறிக்கையில் உண்மைகள் தெரிந்து விடும் என்று பயந்துபோன கள்ளக் காதல் ஜோடி இருவரும், குழந்தையின் உடலை மருத்துவமனையிலே விட்டு விட்டு, பெற்ற தாயும் கள்ளக் காதலன் ராமதாசும் மருத்துவமனையில் இருந்து தலைமறைவானார்கள். 

பெற்றோரைத் தேடித் தேடிப் பார்த்த மருத்துவர்கள், அவர்கள் மாயமானால் அங்குள்ள காவல் துறையில் தகவல் தெரிவித்தனர். இது குறித்து விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து ராமதாஸ் மற்றும் எழிலரசியைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், வேளாங்கண்ணி ஆர்ச் அருகே இருவரும் நின்றுகொண்டிருந்த போது, அவர்கள் இருவரையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

இதையடுத்து, அவர்களிடம் போலீசார் தனிப்பட்ட முறையில் நடத்திய விசாரணையில், குழந்தையை அவர்களே கொன்றது தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக, எழிலரசியின் 5 வயது மகன் தற்போது யாருமின்றி அனாதையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.