தனியாக வசித்து வந்த இரு மூதாட்டிகளான தாய் மற்றும் மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூர கொள்ளையனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் விழும்புரம் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள கலித்திராம்பட்டு கிராமத்தில் 80 வயதான மூதாட்டி சரோஜா என்பவர், தனது 58 வயதான மகள் பூங்காவனத்துடன் தனியாக வசித்து வந்திருக்கிறார்.

இதில், 58 வயதான பூங்காவனத்திற்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், சில காலம் மட்டுமே தனது கணவருடன் சேர்ந்து வாழ்ந்த நிலையில், பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து தனது மகள் வள்ளி உடன் தனது அம்மா வீட்டிற்கு வந்து வசித்து வந்தார்.

இப்படியாக, ஆண் துணை இல்லாமல் அவர்கள் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த 6 ஆம் தேதி சிறுமி வள்ளி தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால், மூதாட்டிகளான சரோஜாவும், பூங்காவனமும் தங்களது வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்தனர். 

இதனையடுத்து, கடந்த 7 ஆம் தேதி அதிகாலை நேரத்தில், அந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையன் ஒருவன், மூதாட்டிகளான தாய் - மகள் 80 வயதான மூதாட்டி சரோஜா மற்றும் 58 வயதான மகள் பூங்காவனத்தை காட்டையால் தாக்கி உள்ளார்.

இதில், அவர்கள் இருவரும் மயங்கி உள்ளனர். இதனையடுத்து, தாய் - மகளான அந்த மூதாட்டி இருவரையும் ஒரே நேரத்தில் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்த அந்த சைக்கோ கொள்ளையன், பாலியல் பலாத்காரம் செய்த பிறகு அவர்களை கொலை செய்துவிட்டு, அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்று உள்ளான்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அங்குள்ள கண்டமங்கலம் போலீசார், 8 தனிப்படைகள் அமைத்து கொலை, கொள்ளை குற்றவாளிகளை பிடிக்க மிகத் தீவிரமாக தேடி வந்தனர்.

அத்துடன், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்து உள்ள ஒட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான கவிதாஸ் என்பவரை, தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

அதுவும், இந்த கொலை நடந்த அடுத்த 20 மணி நேரத்திற்குள்ளாகவே குற்றவாளிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இதனையடுத்து, அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்த நிலையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.

அதன்படி, “மூதாட்டிகள் இருவரையும் கொலை செய்ததை” அவர் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. 

முக்கியமாக, “கொலை குற்றவாளியான 30 வயதான கவிதாஸ், திருமணமாகி அடுத்த 6 மாதத்திலேயே மனைவி பிரிந்து சென்று விட்டார் என்றும், இதன் காரணமாக இது போன்று வீட்டில் யாரும் இல்லாத பெண்களை குறிவைத்து கொள்ளை அடித்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கொலை செய்துவிடும் மனநிலை கொண்டவன்” என்பது தெரிய வந்தது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.