எரிபொருள் விலை உயர்வை கண்டித்து பத்மநாபபுரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மனோதங்கராஜ் மணலி சந்திப்பில் இருந்து நாகர்கோவில் வரை 16 கி.மீ சைக்கிளில் பேரணியாக சென்றுள்ளார். 

16 கி.மீ சைக்கிளில் பேரணியாக சென்று, நாகர்கோவில் அண்ணா அரங்கத்தில் நடைப்பெற்ற குடியரசு தின விழாவில் கலந்துக்கொண்டார். அப்போது மாவட்ட ஆட்சியரை சந்தித்த அவர், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பேரணியாக வந்ததாகவும். இதை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லவும் கேட்டுக்கொண்டார். 


மேலும் அவர், ‘’ 10 ஆண்டுகளுக்கு முன்பு கச்சா எண்ணெய் விலை 150 டாலராக இருந்தபோது பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 ரூபாய் தான் இருந்தது. இப்போது கச்சா எண்ணெய் விலை 55 டாலராக குறைந்துள்ளது, ஆனால் இங்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 90 ரூபாய் விற்கப்படுகிறது. 

மத்திய அரசு தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை சாமானியர்களுக்கு மிகுந்த சுமையாக மாறிவிட்டது. இதனால் வாகனங்களின் பயன்பாட்டை கைவிடுவது போன்ற நிலை தான் ஏற்படும்” என்றார்