புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்தும் விதமாக அரசு சார்பில் தொகுதி தோறும் பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்தும் விதமாக அரசு சார்பில் தொகுதிதோறும் பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது.

பலரும் பரிசோதனைக்கு வராத நிலையில், உப்பளம் தொகுதியிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற பரிசோதனை முகாம் இன்று நடந்தது. இந்த முகாமில் பங்கேற்க வருமாறு தொகுதி அதிமுக சட்டமன்ற எம்எல்ஏ அன்பழகன் அழைப்பு விடுத்திருந்தார்.

மேலும், பொதுமக்களிடம் பரிசோதனையை ஊக்குவிக்கும் விதமாக  5 கிலோ இலவச அரிசியை சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் வழங்கினார். 200 பேருக்கு பரிசோதனை எடுத்ததில் 10 பேருக்கு நோய்த் தொற்று தெரிந்ததால் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

பலரும் பரிசோதனைக்கு வராத நிலையில், உப்பளம் தொகுதியிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற பரிசோதனை முகாம் இன்று நடந்தது. இந்த முகாமில் பங்கேற்க வருமாறு தொகுதி அதிமுக சட்டமன்ற எம்எல்ஏ அன்பழகன் அழைப்பு விடுத்திருந்தார்.

மேலும், பொதுமக்களிடம் பரிசோதனையை ஊக்குவிக்கும் விதமாக  5 கிலோ இலவச அரிசியை சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் வழங்கினார். 200 பேருக்கு பரிசோதனை எடுத்ததில் 10 பேருக்கு நோய்த் தொற்று தெரிந்ததால் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

கொரோனாவை பொறுத்தவரையில், பரிசோதனைகள் அதிகப்படுத்தப்படுவதே, விரைவில் நோயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்பாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டுமெனில், அதற்கு மக்கள் மத்தியில் அதுபற்றிய விழிப்பு உணர்வை அதிகப்படுத்த வேண்டிய அவசியம் அரசுக்கு இருக்கின்றது. அந்தவகையில் புதுச்சேரி எம்.எல்.ஏ.வின் இந்த நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.

கடந்த மாத நிலவரப்படி, கொரோனா பரிசோதனையில் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் சோதனை விகிதம் மிகக் குறைவு என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமிய சுவாமிநாதன் கூறியது குறிப்பிடத்தக்கது. தெலுங்கானா தகவல் தொழில்நுட்பம் மற்றும் கைத்தொழில் துறை அமைச்சர் கே.டி.ராமராவ் அவர்களால் நிர்வகிக்கப்பட்ட ஆன்லைன் ஊடாடும் அமர்வில் பேசிய சௌமிய சுவாமிநாதன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 3 ஆம் தேதி 6,61,892 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன, மேலும் மேற்கொள்ளப்பட்ட மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 2.08 கோடியாக உள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை 138 கோடி ஆகும். கொரோனா பரிசோதனையில் சிறப்பாக செயல்பட்டுள்ள ஜெர்மனி, தைவான், தென்கொரியா, ஜப்பான் போன்ற சில நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஒட்டுமொத்த இந்தியாவில் கொரோனா பரிசோதனை விகிதம் மிகக் குறைவாக உள்ளது.

அமெரிக்கா கூட ஏராளமான மக்களை சோதித்து வருகிறது. எனவே நாம் சில அளவுகோல்களைக் கொண்டிருக்க வேண்டும், ஒவ்வொரு பொது சுகாதாரத் துறையும் ஒரு லட்சம் அல்லது ஒரு மில்லியனுக்கு சோதனை விகிதம் என்ன, சோதனை நேர்மறை விகிதம் என்ன என்பதற்கான வரையறைகளை வைத்திருக்க வேண்டும். போதுமான பரிசோதனைகள் செய்யப்படாமல், கொரோனா வைரஸை எதிர்ப்பது கண்ணை மூடிக்கொண்டு சண்டையிடுவது போன்றது. பரிசோதனை முடிவுகளில் நேர்மறை விகிதம் 5% க்கு மேல் இருந்தால், நடத்தப்படும் சோதனைகள் போதுமானதாக இல்லை என்பதாகும். மாவட்ட மருத்துவமனைகளில் படுக்கைகள், தனிமைப்படுத்த வசதிகள், தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் ஆக்ஸிஜன் பொருட்கள் கிடைப்பதை அரசாங்கங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்த வைரஸ் உலகின் ஒவ்வொரு நாட்டிலும் பரவியுள்ளது, மேலும் சமூகம் பரவலுக்கான தெளிவான சான்றுகள் உள்ளன, என்று கூறியிருந்தார் அவர். 

ஆகவே இந்தியாவில் மக்களுக்கு கொரோனா பரிசோதனை பற்றி விழிப்புஉணர்வு தரப்பட வேண்டியது மிக மிக அவசியமாக இருக்கிறது.