“சென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி பதிவேட்டில் இருக்கும் நிலையில், ஆனால் இருப்பில் இல்லை என்றும், மாயமான நிலக்கரியின் மதிப்பு 85 கோடி ரூபாய்” என்றும், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

வட சென்னையில் செயல்பட்டு வரும் எண்ணூர் அனல் மின்நிலையத்தில் இருக்கும் 2 வது அலகை, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு செய்தார். 

அப்போது, அங்கு நடக்கும் பணிகள் குறித்து, அங்குள்ள அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வட சென்னை அனல்மின் நிலையம் கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு, தொடர்ந்து 100 நாட்களைக் கடந்து
தற்போது இயங்கி மின் உற்பத்தியில் புதிய சாதனை படைத்து வருகிறது” என்று, குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “அனல்மின் நிலையத்தில் இருப்பில் இருகக்கும் நிலக்கரி இருப்பு பற்றி தற்போது சரிபார்க்கப்பட்டது என்றும், அப்படி சரிபார்க்கப்பட்டதில்
வட சென்னை அனல்மின் நிலையத்தில் மட்டும் கிட்டதட்ட 2.38 லட்சம் டன் நிலக்கரி பதிவேட்டில் உள்ள நிலையில், ஆனால் இருப்பில் இல்லை” என்றும், அவர் குற்றம்சாட்டினார்.

அதாவது, “2.38 லட்சம் டன் நிலக்கரியானது, இருப்பில் இல்லாமல் பதிவேட்டில் மட்டுமே இருக்கிறது” என்றும், அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

இப்படியாக, மாயமான நிலக்கரியின் மதிப்பானது 85 கோடி ரூபாய்” என்றும், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஊடகத்தின் முன்பு தெரிவித்தார்.

அத்துடன், “இந்த பதிவேட்டு முறையானது என்றும்,, நடப்பு ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை எடுக்கப்பட்டது” என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும், “இங்கு, நிலக்கரி காணாமல் போன விவகாரத்தில், யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றும், இந்த குற்றத்தில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது” என்றும், அவர் கூறினார்.

அதே போல், “தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, மேட்டூர் மின் நிலையங்களிலும் தொடர்ந்து ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும், இந்த ஆய்வுப் பணிகள் முடிந்த பிறகு அதன் முழுமையான உண்மை நிலவரங்கள் என்ன என்பது தெரிய வரும் என்றும், அதன் பிறகு இது குறித்து செய்தியாளர்களிடமும், தமிழக மக்களிடமும்” முறையாகத் தெரிவிக்கப்படும் என்றும், அவர் தெரிவித்தார்.

“அதிமுக அரசின் நிர்வாக குளறுபடியால் ஏற்பட்ட தவறால், மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது” எனவும், அவர் கவலைத் தெரிவித்தார்.

குறிப்பாக, “இந்தாண்டு மின்கட்டணத்தில் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கப்படவில்லை என்றும், கூடுதல் வைப்புத்தொகை விவகாரத்தில் மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடாது என்று, முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்” என்றும்” அவர் சுட்டிக்காட்டினார்.

“தமிழகத்தில் குறைபாடுகள் உள்ள 8,900 மின்மாற்றிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 
கூறினார்.

முக்கியமாக, “மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இந்த மின் துறையில் இவ்வளவு பெரிய முறைகேடு நடந்திருப்பது ஆய்வில் தெரியவரும்போது, கடந்த அதிமுக
ஆட்சியை நினைத்து வருத்தப்படுவதா? அல்லது, அந்த நிர்வாக திறமையைப் பார்த்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்றும், அந்த அளவிற்கு ஒரு
மோசமான நிர்வாகம் கடந்த ஆட்சியில் நடந்திருப்பதாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார்.