தமிழகத்தில் நுழைந்தது கொரோனா வைரசா? - காதல் வைரசா? என்று கேட்கும் அளவுக்குப் பலரும் டிக்டாக்கில் கொரோனா குறித்து காமெடி பண்ணி வீடியோ வெளியிட்டு வருவது வைரலாகி வருகிறது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் 88 நாடுகளுக்குப் பரவி உள்ள நிலையில், உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. 

Memes on corona virus

மற்ற உலக நாடுகளைப் போலவே இந்தியாவிலும் பரவிய கொரோனா வைரஸ், தமிழகத்திலும் உட்புகுந்து கொண்டது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 60 ஆக  உயர்ந்துள்ளது. இதனால் அலுவலகம், வீடு, பொது இடங்கள் என எல்லா இடங்களிலும் கொரோனா பற்றித் தான், பேச்சாக இருக்கிறது.

Memes on corona virus

இதனிடையே, மத்திய - மாநில அரசுகள் கொரோனா பற்றி விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றன. அதேபோல், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ளவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நம்மையே நாம் பாதுகாக்கும் விதமான பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Memes on corona virus

இந்நிலையில், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த சில டிக்டாக் வெறியர்கள், கொரோனாவையே கிண்டல் பண்ணி வீடியோ வெளியிட்டும், மீம்ஸ் வெளியிட்டும் அட்ராசிட்டி செய்து வருகின்றனர்.

Memes on corona virus

அதில் ஒரு டிக்டாக் வீடியோவில், “இருமிக்கொண்டே வீட்டுக்குள் நுழையும் கணவனை, கதவைத் திறந்து பெட்டி படுக்கையுடன் வெளியே தள்ளி, மனைவி கதவைப் பூட்டி மருந்து தெளித்து” சேட்டை செய்கிறார்.

இன்னொரு வீடியோவில், “கொரோனாவிடம் சிக்க வைக்க, தனது கணவரை அன்போடு உபசரித்து சீனாவுக்கு அனுப்பி வைக்க மனைவி பிளான் செய்கிறார். ஆனால், கணவனோ, கொரோனா வைரஸ்சை விட கொடியது, மனைவி என்னும் காதல் வைரஸ்” என்று சிரிப்பு மூட்டிவிடுகிறார்.

Memes on corona virus

இன்னுமொருவர், ஒரு படி மேலே போய், “சீனாவுல இருந்து ஏதோ கொரோனானு ஒன்னு புதுசா வந்திருக்காமுல.. வீட்டுக்கு வரும்போது 2 கிலோ கொரோனா வாங்கிட்டு வாங்க” என்று இல்ல தரசிகள்  கேலியும், கிண்டலும் செய்துள்ளார்.

இவர்களுக்கு மத்தியில், வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி, கொரோனா வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை, குடும்பமாகச் சேர்ந்து நடித்துக் காட்டி அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளனர்.

Memes on corona virus

இதனிடையே, கொரோனாவுக்கு அஞ்சாமல், தமிழக மக்கள் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு மீம்ஸ் போட்டு வரும் நிகழ்வு, தமிழகத்தில் நுழைந்தது கொரோனா வைரசா? இல்லை, காதல் வைரசா? என்று கேட்கும் அளவுக்கு இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.