“அலைபாயுதே” மாதவன் - ஷாலினி ஸ்டைலில் கல்யாணம் செய்துகொண்டு அவரவர் வீட்டல் தம்பதிகள் வாழ்ந்து வந்த நிலையில், மணப்பெண்ணிற்கு வீட்டில் பார்த்த மாப்பிள்ளை உடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமேடையில் டிவிஸ்ட்க்கு மேல டிவிஸ்ட் நடந்து, இறுதியில்  மணப்பெண்ணை காதலனுடன் போலீசார் அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே வெட்டுவெண்ணி பகுதியில் தான், சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு இந்த ல்யாண காட்சிகள் அரங்கேறி உள்ளது. 

மார்த்தாண்டம் அடுத்த வெட்டுவெண்ணி பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஷாமிலி என்ற இளம் பெண், தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார்.

அதே போல், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இளம் பெண் ஷாமிலிக்கும் திருமணம் செய்து வைப்பது என்று, இரு வீட்டார் பெற்றோர்களும் முடிவு செய்து இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். அதன்படி, நேற்றைய தினம் 14 ஆம் தேதி திருமணம் நடத்துவது தொடர்பாக அனைத்து ஏற்பாடுகளையும் அவர்கள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் செய்து வந்தனர். 
 
எனினும், திருமணத்திற்கு முந்தின நாள் 13 ஆம் தேதி இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மணமகனின் அருகில் மணப்பெண் ஷாமிலி திருமண அலங்காரத்தில் வந்து நிற்க, இரு வீட்டாரின் உறவு முறைகளும், ஊர் மக்களும் மணமக்களை மேடை ஏறி வாழ்த்திக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் திடீரென்று சினிமாவில் க்ளைமாக்ஸ் காட்சிகளில் வருவது போல போலீசாருடன் திபு திபு என்று, ராஜ் என்ற இளைஞர் அங்கு வந்து நின்றுள்ளார். 

போலீசார் திருமண மேடை நோக்கி வருவதைக் கவனித்த இரு வீட்டாரின் பெற்றோர்களும், ஒரு நிமிடம் அப்படியே ஆடிப் போனார்கள். அது மட்டும் இல்லாமல் உள்ளூர் மக்களும் திருமண நிகழ்ச்சியில் ஏன் இத்தனை போலீசார் வருகிறார்கள் என்று, யோசித்து ஏதோ ஒரு பெரும் பிரச்சனை இருக்கிறது என்று உணர்ந்துகொண்டனர்.

அப்போது, போலீசாருடன் வந்த ராஜ், அங்கு கூடியிருந்த மணமக்களின் உறவுக்காரர்கள் முன்னிலையில், “மணப்பெண்ணாக நிற்கும் ஷாமிலி தான், என்னுடைய மனைவி” என்று, உறக்க கத்தி உள்ளார். இதனைக் கேட்ட அங்குக் கூடியிருந்த ஒட்டு மொத்த உறவினர்களும் ஒரு நிமிடம் அப்படியே ஆடிப்போனார்கள். அதே போல், இரு வீட்டார் பெற்றோர்களும் ஒரு கனம் கடும் அதிர்ச்சியடைந்து நின்றனர்.

அப்போது, மேலும் பேசத் தொடங்கிய ராஜ், “ஷாமிலிக்கும் எனக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது என்றும், தற்போது ஷாமிலிக்கும் கட்டாயத் திருமணம் நடைபெறுவதாகவும், அந்த மண்டபத்தில் உறக்க கத்தி உள்ளான்” இதனால், அந்த திருமண மண்டபத்தில் பெறும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

அது வரை, அவ்வளவு அமைதியாக இருந்த திருமண மண்டபத்தில் திடீரென்று சலசலப்பு ஏற்பட்டது. ஊர் காரர்கள், உறவினர்கள் என்று தங்கள் இஷ்டம் போல் தங்களுக்குள் பேசத் தொடங்கினர். இதனைக் கேட்டு அதிர்ந்து ஷாக் ஆகி நின்ற பெண்ணின் பெற்றோர் மற்றும் மாப்பிள்ளை, மாப்பிள்ளை வீட்டார், மணக்கோலத்தில் நின்ற பெண்ணை நிமிர்ந்து பார்த்து உள்ளனர்.

அப்போது, மணப்பெண்ணிடம் அவரது பெற்றோர் “என்ன நடந்தது?” என்று விசாரிக்கத் தொடங்கினர். அருகில் மாப்பிள்ளை பரிதாபமாக நின்றார். அந்த நேரம் குறிக்கிட்ட போலீசார், மணக்கோலத்தில் நின்ற ஷாமிலியிடம், அவரது பெற்றோர் முன்பே நிற்க வைத்து விசாரித்தனர். அப்போது, “என்னுடன் படித்து ராஜை நான் காதலித்தேன்” என்று ஒப்புக் கொண்டார்.

மேலும், “கடந்த செப்டம்பர் மாதம் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்” என்றும், ஷாமிலி ஒப்புக் கொண்டார். 

அத்துடன், “இருவருக்கும் திருமணம் முடிந்த கையோடு, “அலைபாயுதே” படத்தில் வருவதைப் போலவே, நாங்கள் இருவரும் அவரவர் வீட்டில் வசித்து வந்தோம் என்றும், இப்படிப்பட்ட நிலையில் தான் இந்த திருமணம் ஏற்பாடு நடைபெற்றது என்றும், ஆனால் பெற்றோர் மீது கொண்ட பயத்தால் நான் எனக்கு  நடந்த திருமணம் பற்றிய எந்த தகவலையும் வீட்டில் சொல்லாமல் மறைத்து விட்டேன்” என்றும் கூறி ஷாமிலி அழுதுள்ளார்.

அப்போது, மீண்டும் பேசத் தொடங்கிய இளைஞன் ராஜ், “தற்போது கொரோனா காலம் என்பதால், என்னால் இ பாஸ் பெற முடியாமல் முன்பே வர முடியவில்லை என்றும், தற்போது தான் விசயம் தெரிந்து உடனே கிளம்பி வந்தேன்” என்றும், தெரிவித்து உள்ளார்.

இதனையடுத்து, “ராஜ் - ஷாமிலி இருவரும் மேஜர் என்பதால், மணக்கோலத்தில் நின்ற ஷாமிலியை, போலீசார் மீட்டு ஏற்கனவே திருமணம் செய்துகொண்ட ராஜுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக, நடைபெற இருந்த திருமணம் அப்படியே பாதியிலேயே நின்றது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.