திருமணமான பெண்ணுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது சிறுவன், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம் வெங்கமேடு ரயில்வே கேட் அடுத்த சின்ன குளத்துப்பாளையம் பகுதியில் சிவமணி - அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியினர், வசித்து வருகின்றனர்.

Married woman sexual harassment 17 year old boy arrested

இதனிடையே, இவர்களது பக்கத்து வீட்டிற்கு அவர்களது உறவினரின் மகன் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் முகமது ரியாஸ்கான், ஊரடங்கு காரணமாக அங்க வந்து தங்கி உள்ளான். 

அப்போது, பக்கத்து வீட்டில் திருமணம் ஆன அமுதா, கணவர் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்த பெண்ணிடம் அறிமுகமான ரியாஸ்கான், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்தில் தினமும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளான்.

Married woman sexual harassment 17 year old boy arrested

அவன் சிறுவன் என்பதால், பொறுத்துப் பொறுத்து பார்த்த அந்த பெண், அவனைக் கண்டித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் சிறுவனின் சில்மிஷங்கள் எல்லை மீறிப் போகவே, கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து தனது கணவரிடம் அவர் புகார் கூறி உள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர், அங்குள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரியாஸ் கானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, 18 வயதுகூட நிரம்பாத 17 வயது சிறுவன் திருமணம் ஆன பெண்ணுக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.