புற்றுநோயிலிருந்து மீள்வது கடினமானது என தனது அனுபவங்களை ட்விட்டர் மூலம் பகிர்ந்து கொண்ட  மனிஷா கொய்ராலா!

manisha

தமிழில் பம்பாய் , உயிரே , முதல்வன், இந்தியன் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் மனிஷா கொய்ராலா. 1994 ஆம் ஆண்டு வெளியான ஏ லவ் ஸ்டோரி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மனிஷா கொய்ராலா பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். மனிஷா 2010-ம் ஆண்டு தனது  நண்பரான நேபாள தொழிலதிபர் சம்ரத் தஹாலை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2012ஆம் ஆண்டு கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிஷா கொய்ராலா, அமெரிக்காவில் உள்ள மெமோரியல் ஸ்லோன் கேட்டரிங் புற்றுநோய் மையத்தில் 1 வருட காலம் சிகிச்சை எடுத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நோயிலிருந்து குணமடைந்தார். இந்நிலையில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, தான் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருந்தபோது எடுக்கப்பட்ட சில படங்களை நடிகை மனிஷா கொய்ராலா விழிப்புணர்வு பதிவாக வெளியிட்டு பகிர்ந்துகொண்டுள்ளார். அவரது இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது.

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தில், புற்றுநோயின் கடினமான பயணத்தை கடந்து செல்லும் அனைவருக்கும் நான் வாழ்த்துகூற விரும்புகிறேன். இந்த பயணம் கடினமானது என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் அதை விட கடினமானவர். அதற்கு துணிந்தவர்களுக்கு எனது மரியாதையை செலுத்தவும், அதை வென்றவர்களுடன் கொண்டாடவும் விரும்புகிறேன். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை நாம் பரப்ப வேண்டும் மற்றும் நம்பிக்கை நிறைந்த அனைத்து கதைகளையும் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும். நாம் நமக்கும் உலகிற்கும் கருணை காட்டுவோம். அனைவரின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன் என மனிஷா கொய்ராலா குறிப்பிட்டுள்ளார்.