முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த  ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய இறுதி நிமிடங்களை வீடியோவாக எடுத்தவர்கள் பரபரப்பு தகவல்களைத் தெரிவித்து உள்ளனர்.

இந்தியாவின் முப்படைகளுக்குமான தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே திடீரென்று வெடித்து சிதறியதில், பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் பரிதாபமாக உயரிழந்தனர்.

முப்படை தலைமை தளபதியின் எதிர்பாராத இந்த திடீர் மரணம், இந்தியா முழுமைக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அத்துடன், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 13 பேர் உயிரிழந்த நிலையில், விபத்திற்கு சில விநாடிகள் முன்னதாக அந்த பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று, பெரும் வைரலாகி வருகிறது.

அதன் படி, இந்த வீடியோவில் “முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் அங்கு திடீரென்று ஏற்பட்ட பனி மூட்டத்தால், அந்த மலைப்பகுதியில் தாழ்வாக செல்வது நன்றாகத் தெரிகிறது. 

அதன் தொடர்ச்சியாக, பனி மூட்டத்திற்குள் நுழைந்த அடுத்த சில விநாடிகளில் அந்த ஹெலிகாப்டர் திடீரென்று வெடித்து சிதறும் சத்தம் கேட்க, அந்த வீடியோவை எடுத்த நபர், “என்னாச்சு உடைஞ்சுருச்சா” என்று, அதிர்ச்சியுடன் கேட்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தன.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக பரவி வரும் நிலையில், இந்த வீடியோவை எடுத்த சுற்றுலா பயணிகள் யார் என்பது குறித்தும், இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய தற்போது தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த சூழலில் தான், கோயம்புத்தூர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமண புகைப்படக் கலைஞரான ஜோ, என்பவர் தான் அந்த வீடியோ காட்சிகளை எடுத்தவர் என்பது தெரிய வந்திருக்கிறது.

திருமண புகைப்படக் கலைஞரான ஜோ, தனது நண்பர் 52 வயதான நாசர் என்பவருடன் இன்று காலையில் கோவை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார்.

அப்போது, குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதிக்கு படம் எடுப்பதற்காக சென்றதையும் அவர் போலீஸ் கமிஷ்னரிடம் தெரிவித்தார்.

அதாவது,  “கோவை காந்திபுரத்தில் அச்சகம் நடத்தி வரும் கரும்புக்கடையைச் சேர்ந்த நாசர் மற்றும் அவரது குடும்பத்தினர் புதன் கிழமை ஊட்டிக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், அவர்களுடன் ஜோவும் சென்றிருக்கிறார். 

மேலும், போலீஸ் கமிஷ்டரிடம் அவர் ஜோ தெரிவித்துள்ள வாக்குமூலத்தில், “நாங்கள் மதியம் 12.15 மணி அளவில், அங்குள்ள காட்டேரி அருகே மலை ரயில் பாதையை அடைந்து நிலையில், எங்கு குடும்பத்தினர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து கொண்டு இருந்தனர்.  
அப்போது தான் ஹெலிகாப்டர்  பறக்கும் சத்தம் கேட்டு, நாங்கள் வீடியோ எடுத்தோம்.

அந்த நேரத்தில் அங்கு தாழ்வாக பறந்த அந்த ஹெலிகாப்டரை, எனது செல்போனில் நான் வீடியோ பதிவு செய்தேன். அது, வெறும் 19 வினாடிகள் கொண்ட வீடியோ தான். 

அப்போது, ஹெலிகாப்டர் சீராக பறந்து மூடுபனிக்குள் மறைந்தது. இறுதியாக, அந்த ஹெலிகாப்டர் அங்கு பனிமூட்டத்திற்குள் மறந்தது. அதன் பிறகு, மரத்தில் ஹெலிகாப்டர் இடித்து பயங்கர சத்தம் கேட்டத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நாங்கள் விரைந்து சென்றோம். 

அப்துபோது, எரிந்த நிலையில் ஹெலிகாப்டர் கீழே கிடந்தது. ஹெலிகாப்டர் வீடியோவை போலீசிடம் நாங்கள் ஒப்படைத்து விட்டோம். இந்த ஹெலிகாப்டர் விபத்து விசாரணைக்கு எங்கள் வீடியோ முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக தற்போது இருக்கிறது.

பின்னர், நாங்கள் ஊட்டியை அடைந்ததும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளை அணுக நாங்கள் முயற்சித்தோம். ஆனால், அதிகாரிகளுக்கு செய்தியை தெரிவிக்க முடியவில்லை. 

நாங்கள் இருவரும் சம்பவ இடத்திற்கு மீண்டும் திரும்பி, அங்குள்ள அதிகாரிகளுடன் இது பற்றிய செய்தியைப் பகிர்ந்து கொண்டதோடு, எங்களது வீடியோவையும் நாங்கள் கொடுத்தோம்” என்றும், ஜோ தெரிவித்து உள்ளார்.

இதனிடையே,  ஹெலிகாப்டர் விபத்தின் கடைசி நிமிடங்களை வீடியோவாக எடுத்த ஜோ அளித்துள்ள வாக்குமூலம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகுிறது.